Saturday, November 3, 2012

பிரம்மாவிடம் சரணடைந்த பைரேட் பே

 The Pirate Bay  இந்த பெயர் டோர்ரென்ட் உபயோகபடுத்தும் அனைவரும் தெரிந்திருக்கக் கூடிய ஒரு வெப்சைட். உலகிலேயே மிக உன்னதமான resilient பிட் டோர்ரென்ட் சைட் என்ற பெருமையைக் கொண்டது. அது என்ன resilient. Resilient என்றால் ஒரு பொருளை நீங்கள் அழுத்தி, வளைத்து, இழுத்து இப்படி என்ன செய்தாலும் திரும்பவும் தன் பழைய நிலைக்கே திரும்பிவிடும் பொருளுக்கு resilient என்றுக் கூறுவார்கள். எத்தனை முறை எரித்தாலும் திரும்பவும் உயிர்த்தெழும் போனிக்ஸ் பறவையைப் போல. இதன் வரலாற்றை படித்தால் இந்த பட்டம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியும்.
 
Hans Fredrik Neij (TiAMO)
  
Per Gottfrid Svartholm Warg
(Anakata)
கி.பி. 2003 நவம்பர்-இல் ஸ்வீடனில் ஆரம்பிக்கப்பட்டது இந்த வெப்சைட்.  Piratbyrån என்ற அமைப்பினர் இதை ஆரம்பித்தனர். Gottfrid Svartholm மற்றும் Fredrik Neij (இவர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். பழைய pirated software-இல் anakata, TiAMO என்ற பெயர்களில் இருப்பார்கள்) இதை நடத்தினார்கள்.

  ஸ்பானிஷ் மொழியில் ஒரு file sharing server இல்லை என்ற குறையை போக்கவே தனது லேப்டாப்பை ஒரு சர்வராக மாற்றி புதிதாக ஒரு tracker software (hypercube) எழுதி The Pirate Bay சர்வரை உருவாக்கினார்கள். சிறிது காலம் கழித்து, அந்த வெப்சைட் ஸ்வீடன் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்து உபயோகபடுத்தபடுவதை (80%) அறிந்து, July 2005 முதல் மற்ற மொழிகளுக்கும் பொதுவாக மாற்றினார்கள்.

முதல் சர்வர் - Tiamo-வின் லேப்டாப்
Celeron 1.3 MHz with 256MB  RAM

31 May 2006-இல் Motion Picture Association of America இவர்கள் மேல் குற்றம் சாட்டியதை தொடர்ந்து Stockholm-இல் இருந்த சர்வர்-ஐ ஸ்வீடன் போலீசார் வாரி சுருட்டிக் கொண்டுப் போய் விட்டார்கள். ஆனால் மூன்றே நாட்களில் மீண்டும் முளைத்து விட்டது Pirate Bay.  ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது Pirate Bay. ஆனால் சர்ச் என்ஜின் மட்டும் வேலை செய்யவில்லை. ஜூன் 9-ஆம் தேதி முழு வேகத்துடனும், முன்பை விட அதிக வேகத்துடன் வேலை செய்த்தது Pirate Bay. ஆரம்பத்தில் நான்கு லினக்ஸ் சர்வர்களும், ஒரு வெப் சர்வரும் கொண்டு நெதர்லாந்து நாட்டிலிருந்து இயங்கியது. ஆனால் ஹாக்கர்கள் ஸ்வீடன் போலீசை விடவில்லை. ஜூன் 1,2,3 தேதிகளில் ஸ்வீடன் போலீசின் வெப்சைட் இயங்கமுடியவில்லை. இது போன்று மேலும் பல ரைடுகள் பிற்காலத்தில் வரலாம் என்று கணித்த Pirate Bay நிர்வாகிகள், பெல்ஜியம் மற்றும் ரஷ்ய நாடுகளில் ஒரு காபி சர்வர்களை வைத்தார்கள்.
மே 2007 ஹாக்கர்ஸ் Pirate Bay-வை தாக்கினார்கள். ஆனால் இரண்டு மணி நேரத்தில் அது மீண்டு வந்தது.
27 ஏப்ரல் 2009 சர்வர் சப்ளை செய்த கேபிள்கள் நாசம் செய்யப்பட்டன. IPv4 கேபிள்கள் மட்டுமே நாசம் செய்யப்பட்டதால் IPv6 கேபிள்கள் மூலம் தடை இல்லாமல் இயக்கப்பட்டது.
24 ஆகஸ்ட் 2009 Pirate Bay ஹோஸ்ட் செய்த ISP திடீரென சைட் இட மாற்றம் செய்ய சொல்லி சைட்-ஐ மூடி விட்டார். மூன்றே மணி நேரத்தில் வேறொரு ISP இடமிருந்து Pirate Bay முளைத்தது.
6 அக்டோபர் 2009 Pirate Bay IP பிளாக் செய்யப்பட்டது. உடனே அது CyberBunker என்ற சர்வர் IP இல் இயங்கத் தொடங்கியது. Cyber Bunker IP routing தான் செய்ததே தவிர பைல் எதுவும் வைத்திருக்கவில்லை. உண்மையான சர்வர் எங்கு உள்ளது என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியவில்லை.
17 மே 2010 Cyber Bunker-க்கு IP Routing-ஐ நிறுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஸ்வீடன எதிர்க் கட்சியான Piratpartiet (The Pirate Party) (இது Pirate Bay-இன் அரசியல் கட்சி, பல லட்சம் இளைஞ்ர்களை கொண்டுள்ளது. ஐரோப்பிய பார்லிமென்ட்-க்கு இரண்டு உறுப்பினர்களை அனுப்பியுள்ளது. ஸ்வீடனின் மூன்றாவது பெரிய கட்சி இது) செர்வரில் இருந்து வரத் துவங்கியது.
8 ஜூலை 2010 அர்ஜென்டினாவை சேர்ந்த ஹேகர்ஸ் சர்வர்-ஐ ஹாக் செய்தார்கள்.
16 மே 2012  மிகப் பெரிய DDoS அட்டாக் நடத்தப்பட்டு 24 மணி நேரம் சர்வர் முடக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20௦ முறைகள் Pirate Bay சர்வர்-ஐ முடக்கி இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஓரிரு நாட்களிலேயே மீண்டும் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாவது Pirate Bay முளைத்து விடுகிறது.
சென்ற மார்ச் 1 அன்று Pirate Bay வெளியிட்ட ஒரு அறிக்கை அனைவரையும் ஆச்சர்யபட வைத்தது. ஒரு நாட்டின் நிலபரப்பில் சர்வர் வைத்தால் தானே அந்த நாட்டின் சட்டப்படி தவறு என்கிறீர்கள். நாங்கள் வானத்தில் ஐந்து கிலோமீட்டர் உயரத்தில் மிதக்கும் சர்வர்களை வைக்க போகிறோம். அவைகள் சர்வ தேச கடல் பகுதிகளில் பறக்கும். அப்போது எந்த நாட்டின் சட்டமும் எங்களை முடக்க முடியாது என்று அறிவித்தார்கள்.
உலகின் பல நாடுகள் Pirate Bay-வை தடை செய்திருக்கின்றன. ஆனால் அத்தனை தடைகளையும் எப்படியோ உடைத்து Pirate Bay வந்து விடுகிறது.
இந்தியாவில் 4 மே 2012 இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் Pirate Bay-ஐ தடை செய்ய சொன்னது. YouBroadband மற்றும் Hathway தவிர மற்றவர்கள் தடை செய்தார்கள். 22 ஜூன் 2012 அன்று சென்னை ஹைகோர்ட் எந்தெந்த பக்கங்கள் பைரசி மென்பொருளைக் கொண்டுள்ளதோ அந்த பக்கங்களை மட்டும் தான் தடை செய்ய வேண்டும், ஒட்டுமொத்தமாக முழு சைட்யும் தடை செய்யக் கூடாது என்று தீர்பளித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் Pirate Bay சர்வர்களுக்கு சென்ற மின்சாரம் தடை செய்யப்பட்டதால் ஐந்து மணி நேரம் அவை வேலை செய்யவில்லை. அப்பொழுது தான் அவர்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று யோசித்தார்கள். இப்பொழுது மிகவும் பிரபலமாய் உள்ள cloud-ஐ வைத்து ஏன் சர்வர்களை இயக்கக் கூடாது என்று நினைத்தார்கள்.
உலகம் முழுவதுமுள்ள cloud சேவை அளிப்பவர்களிடம் கணக்கு (மற்றவர்களின் பெயர்களில்) ஆரம்பிக்கப்பட்டது. The Pirate Bay, load balancer  மற்றும் transit-router களை மட்டுமே தன்னிடம் வைத்துள்ளது. அதையும் ஒரே நாட்டில் வைக்காமல் உலகில் உள்ள ஐந்து கண்டங்களிலும் வைத்துள்ளது. நம்முடைய (user) கோரிக்கைகள் எல்லாம் load balancer-இடம் போகும். Load Balancer ஒரு டிஸ்க் இல்லாத சர்வர் (diskless server). அனைத்து விஷயங்களும் RAM-இல் தான் இருக்கும். Load balancer-இல் இருந்து transit router வழியாக cloud –இல் உள்ள virtual server-க்கு செல்லும் எல்லா டாடாக்களும் (data), encrypt செய்யப்பட்டிருப்பதால், யாரும் கண்டுப் பிடிக்க முடியாது. Cloud provider-க்கே நாம் The Pirate Bay சர்வர்-ஐ வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்றுத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், டாடா பரிமாற்றங்களை பார்க்க முடியாது.
சரி. The pirate Bay-ஐ போலீஸ் ரைடு செய்தால் என்ன கிடைக்கும். வெறும் transit router மட்டுமே கிடைக்கும். சர்வர்கள் எதுவுமே இருக்காது. அதைப் பிடித்துக்கொண்டே அடுத்த நாட்டிற்கு சென்றால் அங்கு ஒரு load balancer இருக்கும். அதிலும் டிஸ்க் எதுவும் கிடையாது. அது ஒரு diskless server. எப்படியோ cloud server-ஐ கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு வெறும் 500GB encrypted டிஸ்க் இமேஜ் மட்டுமே கிடைக்கும். ஒரு cloud அளிப்பவர் நிறுத்தினாலும் கவலை இல்லை. வேறொரு கண்டத்தில், வேறொரு நாட்டில் உள்ள cloud virtual server வாங்கி அதில் VM disk image-களை நிறுவி load balancer-க்கு இணைத்தால் முடிந்தது. இதை எல்லாம் செய்ய மொத்தம் மூன்று நிமிடங்கள் போதும். உபயோகிப்பாளர்களுக்கு மாற்றம் எதுவும் தெரியாது. தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் load balancer-உடன் virtual cloud server தொடர்பின்றி இருந்தால் அவை தானாகவே அணைந்து விடும்.
அது என்ன பிரம்மா. அட cloud-ஐ இப்போது The Pirate Bay இப்படி தான் சொல்கிறார்கள். The Pirate Bay-இன் அதிகாரபூர்வ அறிக்கையை பாருங்கள்.
The cloud, or Brahman as the hindus call it, is the All, surrounding everything. It is everywhere; immaterial, yet very real.
If there is data, there is The Pirate Bay.
Our data flows around in thousands of clouds, in deeply encrypted forms, ready to be used when necessary. Earth bound nodes that transform the data are as deeply encrypted and reboot into a deadlock if not used for 8 hours.
All attempts to attack The Pirate Bay from now on is an attack on everything and nothing. The site that you're at will still be here, for as long as we want it to. Only in a higher form of being. A reality to us. A ghost to those who wish to harm us.
Adapt or be forever forgotten beneath the veils of maya.
பிரம்மம் என்றால், எங்கும் நிறைந்திருப்பவன், எங்கும், எதிலும், நீக்கமற, கண்ணுக்குத்தெரியாத ஆனால் உண்மையில் உள்ளவன் என்று பொருள். The Pirate Bay-யும் இப்போது அப்படித்தான். உலகின் எல்லா இடங்களிலும், கண்ணுக்குத்தெரியாமல் நிறைந்திருக்கிறது. இதை தடுக்க நினைத்தால் உலகில் அனைத்தையும் தடுக்க வேண்டும் அல்லது எதையுமே தடுக்க கூடாது. எல்லாம் மாயா.
எவ்வளவு தான் தடை செய்தாலும், திரும்ப திரும்ப முளைக்கும் இந்த போனிக்ஸ் வெப் சைட்-ஐ எப்படி தடை செய்வது என்று ஸ்வீடன், அமெரிக்க போலீஸ் தலையை பிய்த்து கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு சோதனைகளும் தான் எங்களுக்கு பல சாதனைகளை செய்ய தூண்டியது என்று போலீஸ்-க்கு நன்றி சொல்லியுள்ளனர் The Pirate Bay குழுவினர்.
எல்லோரையும் ஆச்சரியப்பட வைப்பது ஒன்று தான். ஒவ்வொரு சோதனைகளை தாண்டும் போதும், கொஞ்சம் கூட கோபப்படாமல் நக்கலாக பதிலளிப்பது (நம்மூர் கோயம்புத்தூர் குசும்பு போல) The Pirate Bay-இன் ஸ்பெஷல். சில நக்கல்கள்.
09-06-2006 ஸ்வீடன் போலீஸ் ரைடுக்கு பின்

நாங்கள் போனிக்ஸ் பறவை

ஸ்டாக்ஹோம் நகர கோர்ட்டில் இந்த வழக்கு நடந்த போது, ஸ்வீடன் வழக்கப்படி, எதிக்கட்சி வக்கீலான professor emeritus Roger Wallis-இடம் நீதிபதி, அவர்கள் வழக்கப்படி, இந்த கேசை வாதாடுவதற்க்காக ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டதற்கு, அவர் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், கோர்ட் விருப்பபட்டால் தனது மனைவிக்கு ஒரு மலர் பூங்கொத்து அனுப்பலாம் என்றும் கூறினார். ஆனால் நீதிபதி இதை ஏற்க்க மறுத்து விட்டார். அன்று மாலைக்குள் US$5,000 அளவிற்கு வலைதளங்கள் மூலம் அவர்கள் வீட்டிற்கு பூங்கொத்துக்கள் உலகம் முழுவதும் இருந்து அனுப்பப்பட்டன.
சென்ற வாரம் நோபல் பரிசு அறிவித்தபோது அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். நியாயமாக அமைதிக்கான நோபல் பரிசு எங்களுக்கு கிடைக்க வேண்டும். அடுத்த வருடமாவது எங்களுக்கு தரவில்லை என்றால் ஸ்வீடன் நாட்டை நாங்கள் தடை செய்து விடுவோம். அதன் பின் தெரியும் எங்களால் ஸ்வீடன் நாட்டு மக்கள் எவ்வளவு நிம்மதியாக வீட்டில் இருக்கிறார்கள் என்பது. பலருக்கு இலவச மென்பொருள் அளித்தது மூலம் நாங்கள் மிகப் பெரிய பொருளாதார உதவி செய்துள்ளோம். அதற்காக எங்களுக்கு பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு தர வேண்டும்.

Cloud-க்கு போனதால் வந்த நன்மைகள்.

1.     பண முதலீடு மிகவும் குறைவு.
2.     சைட் டௌன் டைம் மிகக் குறைவு.
3.     சைட்டை ஒரு செர்வரில் இருந்து, மற்றொன்டிற்கு மாற்றுவது மிகவும் எளிது.
4.     யாராலும் தடை செய்ய முடியாது.
5.     இவை எல்லாவற்றையும் விட 17 virutal machines, ச்விட்ச்கள், ரௌட்டர், cloud, cooling system அனைத்தும் சேர்ந்து வெறும் 2500W பவரில் இயங்குகிறது. இது கிட்டத்தட்ட நம் வீட்டில் இருக்கும் ஒரு வாக்குவம் கிளீனர் எடுத்துக்கொள்ளும் பவருக்கு சமம். இதற்கு முன் அவர்கள் உபயோகபடுத்திய 16 dedicated servers & 3 switches 6000W பவரை உறிஞ்சியுள்ளன. இப்போது உலகில் உள்ள நம்பர் ஒன் கிரீன் சைட் The Pirate Bay தான்.
உலகில் பல பைல் ஷேரிங் சைட்கள் இருக்க The Pirate Bay-ஐ மட்டும் ஏன் இப்படி குறி வைக்கிறார்கள்.
          உலகின் எழுபத்து ஏழாவது பிரபலமான வெப்சைட்.
          அமெரிக்காவின் எழுபத்தி ஆறாவது பிரபலமான வெப்சைட். (இதுதான் மிக முக்கியம்).
          இந்தியாவில் 48ஆவது பிரபலமான வெப்சைட்.
   அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் தான் அதிகம் பேர் இதை உபயோகப்படுத்துகிறார்கள்.
வாழ்க வளமுடன் The Pirate Bay.



Saturday, August 4, 2012

சீனாவின் ராக்ஷஸ அணுகுண்டு


Ankit Fadia இவரை உங்களுக்கு தெரியுமா? நமது கோயம்புத்தூர்-இல் பிறந்து மும்பாயில் வளர்ந்து டெல்லி பப்ளிக் பள்ளியில் படிக்கும் போது chip பத்திரிக்கையின் இணைய தளத்தை ஊடுருவி தனது போட்டோவை அதில் இணைத்தார். பின்னர் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரை அழைத்து தான் செய்ததை ஒப்புக் கொண்டார். பத்திரிக்கை ஆசிரியரும் அவர் மேல் புகார் கொடுக்காமல், அவருக்கு தனது கம்பெனி-இல் பதவி வழங்க முன் வந்தார். அப்போது தான் தெரிந்தது அவருக்கு வயது வெறும் 13தான் என்பது. தனது 15 வது வயதில் “Ethical Hacking” Ethical Hacking published by macmillan india” என்ற புத்தகத்தை எழுதியதின் மூலம் மிக குறைந்த வயதில் (15) ஒரு புத்தகத்தின் ஆசிரியர் என்ற கவுரவம் பெற்றார். தற்போது இவர் மேல் சில குற்றசாட்டுகள் இருந்தாலும் “Ethical Hacking” என்ற ஒரு நல்ல விஷயத்தை உருவாக்கினார் என்ற நல்ல எண்ணமும் இவர் மேல் உண்டு.

Ethical Hacking என்றால் ஒரு மென்பொருளில் உள்ள ஓட்டைகளை ஆராய்ந்து கண்டுபிடித்து அதைப் பற்றி அந்த மென்பொருளை தயாரித்த கம்பெனி-இடமே தெரிவிப்பது என்பதாகும். பெரும்பாலும் இதற்கு முன் அந்த ஓட்டையை வைத்து வைரஸ் எழுதுபவர்கள் தான் இருந்தார்கள். இப்படி ethical hackers இருப்பதால் தான் நமக்கு ஒவ்வொரு முறையும் செக்யூரிட்டி அப்டேட் உடனுக்குடனே கிடைக்கிறது.

சரி இப்போது நமது விஷயத்திற்கு வருவோம். இந்த ethical hacker-களில் முக்கியமானவர் Jonathan Brossard. பிரான்சில் பிறந்து இந்தியாவில் ஆங்கிலம் கற்று ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவர் தான் இன்று hackers மத்தியில் ஒரு ஹாட் டாபிக். தனது பயோ-டேட்டாவில் கூட மிக அழகாக ஆங்கிலம் பேசுவேன் என்றுக் குறிப்பிட்டுள்ளார். தனது ஆங்கில திறமைக்கு இந்திய கல்லூரிகளுக்கு நன்றி சொல்லியுள்ளார். (இவர் பிரான்ஸ்-இல் பிறந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). இவர் கண்டுபிடித்துள்ள malware க்கு ராக்ஷசா என்று இந்தியப் பெயரைத் தான் வைத்துள்ளார். (ராட்சதன்). உலகில் உள்ள அனைத்து hackers௦-ம் Black Hat Security Conference, Los Angels-ல் ஒவ்வொரு வருடமும் கூடுவார்கள். இந்த வருடம் கடந்த ஜூலை 29-ஆம் தேதி கூடியது. அதில் Jonathan Brossard செயல்படுத்தி காண்பித்த இந்த மால்வேர் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

அப்படி என்ன பெரிய மால்வேர். இந்த மால்வேர் உங்கள் பயஸ்-உடனே உங்களுக்கு வருகிறது. உங்கள் பயஸ் தான் உங்கள் கணினியின் முதல் வேர். இது தான் பின்னர் அனைத்து பாகங்களையும் இயக்க வைக்கிறது. இதில் ஒரு வைரஸ் உள்ளே வந்தால் இப்போதுள்ள சில ஆண்டி-வைரஸ் கண்டுபிடிக்கின்றன. ஆனால் இந்த ராக்ஷஸவை எந்த மென்பொருளும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் முடியாது. இந்த ராக்ஷஸ உங்கள் பைல்களை நீங்கள் இன்டர்நெட் ஆரம்பித்த உடன் தனது சர்வர்-க்கு உங்களுக்கும் எந்தவொரு ஆண்டி-வைரஸ் மென்பொருளுக்கும் தெரியாமலே அனுப்பி விடுகிறது.

ஆனால் இன்டெல் இதை மறுக்கிறது. இப்போதெல்லாம் பயஸ் cryptographic code signed உடன் வருகிறது. எனவே இந்த மால்வேர் வர முகாந்திரம் இல்லை என்கிறது இன்டெல். ஆனால் மிக அதிக விலையுள்ள தாய் பலகைகள் மட்டுமே இப்படி வருகிறது. நாம் வாங்கும் அனைத்து தாய் பலகைகளும் சாதாரண பயஸ் உடன் தான் வருகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இது தாய்ப் பலகையில் உள்ள பயஸ் வழியாக மட்டும் வரும் என்பதில்லை. நீங்கள் புதிதாக வாங்கி இணைக்கும் network card, PCI card, PCI express card, cd-rom என எந்த ஒரு உறுப்பிலும் உள்ள பயஸ் (இங்கு பயஸ் என்பதை eeprom or rom என்றும் சொல்லலாம்) மூலமாகவும் இது உங்கள் கணினியை தாக்கலாம்.

Jonathan Brossard-ன் ஒரு வார்த்தை தான் அனைவரையும், அனைத்து நாடுகளையும் கதிகலங்க வைத்துள்ளது. நாம் வாங்கும் அனைத்து வன்பொருட்களும் (hardware) சீனாவில் தயாரிக்கபடுகின்றன. ஏற்கனவே சீனா இந்த மால்வேர் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. ஒரு அரசாங்கத்தால் வாங்கப்படும் ஒரு கணினியில் இந்த மால்வேர் இருந்தால் அரசாங்க ரகசியங்கள் நிலை என்ன? கிட்டத் தட்ட உலகில் உள்ள அனைத்து அரசாங்க, ராணுவ ரகசியங்களும் சீனாவிடம் முன்பே இருக்கலாம். அதை விட பயங்கரம் ஒரு நாட்டின் அனைத்து ஏவுகணை, அணுகுண்டு ஏவ வைத்திருக்கும் கட்டுப்பாடு கணினியின் (control computer) முழு கட்டுப்பாடும் சீனாவின் கையில் இருந்தால்?

இதை தவிர்க்க இன்டெல் சொன்னது போல cryprographic code signed தாய்ப் பலகையை வாங்க வேண்டும். அல்லது உங்களிடம் உள்ள அனைத்து பயஸ்களும் ஒரே நேரத்தில் பிளாஷ் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் பிளாஷ் என்பது மிகவும் கடினமான வேலை. ஒன்றின் பின் ஒன்றாகத் தான் செய்ய முடியும். அவ்வாறு பிளாஷ் செய்ய உங்களுக்கு administration rights இருக்க வேண்டும். இதில் ரொம்ப முக்கியம் administration rights-இல் நீங்கள் ஒரு பயஸ்-ஐ பிளாஷ் செய்யும்போது மற்றொரு பர்ர்ட்டில் உள்ள மால்வேர் தானாகவே பயஸ்-இல் இணைய வாய்ப்புள்ளது. இப்போதைக்கு இந்த மால்வேர் இருந்தால் அவர்கள் கூறும் ஒரே வழி அந்த கணினியை தூக்கிப் போட்டுவிட்டு வேறொன்று புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள் என்பது தான்.

ஒரு தாய்ப் பலகையோ அல்லது பிசிஐ கார்டுகளோ சீனாவில் தயாரிக்கப்பட்டு பல கைகள் மாறித் தான் இறுதியாக பயனீட்டாளர் கைகளில் போய் சேருகிறது. நடுவில் எங்கே வேண்டும் என்றாலும் இந்த மால்வேர்-ஐ நீங்கள் இணைக்கலாம்.

இந்த மால்வேர்-ஐ பற்றி சென்ற வருடமே Jonathan Brossard எச்சரித்தார். அப்போதும் அதைப் பற்றி இன்டெல் மறுத்தது. ஆனால் அமெரிக்க அரசும், ராணுவமும் உடனே ஒரு குழுவை அமைத்து இதைப் பற்றி ஆராய சொன்னது. அந்தக் குழுவின் அறிக்கை அறிக்கையை பார்க்கும் போது சீனா முன்பே PACOM மற்றும் TRANSCOM கணினிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். PACOM என்பது அமெரிக்காவின் ஒட்டுமொத்த ராணுவத்தை கையாளும் ஒரு துறை. அமெரிக்காவின் மேற்கு கரை முதல் இந்தியாவின் மேற்கு கரை வரையும் அண்டார்டிக்கா முதல் தெற்கு முனை வரையும் உள்ள ராணுவ விவகாரங்களை கையாளும் ஒரு துறை. TRANSCOM என்பது அமெரிக்க ராணுவத்தின் முப்படைகளையும் இடமாற்றம் மற்றும் பொருள் சப்ளை செய்யும் ஒரு துறை. உளவுத் துறையிலும் கணினித் துறையிலும் சீனா எந்த அளவு முன்னேறி உள்ளது என்பதை அந்த அறிக்கை மிகத் தெளிவாக கூறியுள்ளது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே சீனாவின் PLA (People Liberation Army) தனது வேலைகளை துவக்கியுள்ளது. C4ISR (Command, Control, Communications, Computers, Intelligence, Surveillance and reconnaissance) என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து அதற்காக மிகப் பெரிய அளவிலும், பெரும் பணம் ஒதுக்கியும் செயல்ப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த பேக் டோர் மால்வேர் கூட அவர்கள் தற்போது புதிதாக் மாற்றிய கணினி கொள்கை மூலம் தான் தெரிய வந்தது. சீனா தாங்கள் வாங்கும் தாய் பலகைகள் பயஸ் cryptographic code signed உடன் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டது. அப்போது தான் அது ஏன் என்ற கேள்வி எழுந்தது? பின்னர் தான் இந்த ராக்ஷஸ வெளியில் வந்தது. இதை சீனா information warefare என்று அழைக்கிறது. அதாவது ஒரு நாட்டுடன் சீனா போர் செய்ய வேண்டும் என்றால் அது மிகச் சுலபமாக, எதிரி நாட்டின் அனைத்து நெட்வொர்க்களையும் கட்டுபடுத்தி வென்றிட முடியும். எதிரி நாடு தன் குண்டுகளை இயக்க முடியாது, தனது படைகளுக்கு இடம் பெயர ஆணையிட முடியாது. கிட்டத்தட்ட எதிரி கையை கட்டி விட்டு சண்டையிட்டு வெற்றி பெருவது போன்றது இது. Integrated Information warfare (IW) என்பது PLA-வின் புதிய முயற்சி. இது நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது. மூன்றாவது பிரிவு சீனாவின் உள்கட்டமைப்புகளை (கணினி, நெட்வொர்க்) காப்பாற்றுவதற்காகவும், நான்காவது பிரிவு வெளிநாட்டு உள்கட்டமைப்புகளை குலைப்பதற்க்காகவும் இருக்கிறது.
தற்போது கணினி ஆராய்ச்சிற்காக ஐந்து மணிக் குழுக்களை ஆரம்பித்து உள்ளது. இதன் கீழ் 50௦ பல்கலைக் கழகங்கள் IW ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. சீனாவின் மிகப் பெரிய பலமாக இருப்பது அங்குள்ள வெளிநாட்டு கம்பெனிகள் தான். வெளி நாட்டு கம்பெனிகள் சீனாவின் உள்நாட்டு கம்பெனிகளுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த உள்நாட்டு கம்பெனிகள் தனியாக அரசு ஆராய்ச்சியுடன் இணைந்துள்ளன. எனவே எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புகளும் இவர்கள் மூலமாக அரசுக்கு கிடைத்து விடுகிறது.

உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு கம்பெனிகள் கூட தங்கள் மிக நவீனமான கருவிகளை சீனாவில் தான் தயாரிக்கின்றன. இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக சீனா கருதுகிறது. எனவே தான் நிறைய சலுகைகளை வாரி வழங்குகிறது. ஒரு சில நிறுவனங்களில் மிகக் மிகக் குறைந்த கூலிக்கே ஆராய்ச்சியாளர்கள் வேலை செய்கிறார்கள். இதை உற்பத்தி விலை குறைவு என வெளிநாட்டு கம்பெனிகள் நினைக்கின்றன. ஆனால் உண்மையில் அவர்களுக்கு மிக அதிக சம்பளம் கொடுக்கிறது PLA.

இதில் அவர்கள் முக்கியமாக சந்தேகபடுவது (சாட்சிகளோ ஆதாரங்களோ இல்லை) Huawei, ZTE மற்றும் Datang.  இந்த மூன்று கம்பெனிகளும் உலகின் 3G நெட்வொர்க்கின் மார்க்கெட்டை பெரும்பான்மையாக வைத்துள்ளன. இந்த மூன்று கம்பெனிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளன. இதை digital triangle என்று கூறுகிறார்கள். இந்த மூன்றுமே சீனாவின் அரசாங்கத்திற்கு supplier ஆகவும் அதே நேரம் ஆராய்ச்சி உதவியாளர்களாகவும் இருக்கின்றன.

Huawei முதலில் Symantec உடன் ஆண்டி-வைரஸ் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு குறித்து சீனாவில் ஆராய்ச்சியில் இறங்கியது. திடீரென ஒரு நாள் Symantec-இன் ஒரு பிரிவை முழுவதுமாக வாங்கி தனதாக்கிக் கொண்டது. ஆனால் இது போல பல நெட்வொர்க் பாதுகாப்பு கம்பனிகளை ஹோவெய்  வாங்கியுள்ளது. அதை எல்லாம் சீனா வெளியே தெரியாமல் மறைத்துள்ளதும் இப்போது தெரிய வந்துள்ளது. ஹோவெய் கம்பெனியை சீனா அரசாங்கம் “national champion” என்று கூறியுள்ளது. ஹோவெய் இன்று உலகின் இரண்டாவது மிகப் பெரிய நெட்வொர்க் கம்பெனி. PLA-விற்கும் ஹோவெய்-க்கும் உள்ள நெருக்கம் பற்றி மேலும் சொல்ல தற்போது சீனா வெளியிட்டுள்ள tender law உதவும். இந்த டெண்டர் லா புத்தகத்தில் உள்நாட்டு தனியார் கம்பனிகளை எப்படி தேர்வு செய்வது என்பதில் Guowei மற்றும் Huawei கம்பெனிகளுக்கு முன்பு ராணுவத்திற்கு தேவையான IC-க்களை தயாரிப்பதற்கு அனுமதித்ததால் மற்ற நாடுகளால் தடை செய்யப்பட்ட IC-களை எவ்வாறு அவர்கள் தயாரித்து கொடுத்தார்கள் என்பதையும் தனியார் கம்பெனிகளை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற வேலைகளுக்கு உபயோகபடுத்துவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். அதை விட ஹோவெய்-இன் “Huawei Technology Fund” என்ற கல்வி மானிய பணம் பெரும்பாலும் சீனாவின் ராணுவ ஆராய்ச்சி பல்கலைகழகங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சீனா நாட்டு ராணுவத்தினருக்கு டெக்னிகல் ட்ரைனிங் தருவதும் ஹோவெய் தான்.

Zhongxing Telecom Technology Corp (ZTE) : உலகின் ஐந்தாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனம் இது. ஒரு அரசாங்க ஆரம்பித்த கம்பெனி இப்போது தனியார் கம்பெனியாக இருக்கிறது.

Datang Telecommunications Science and Technology Co., Ltd. : சீனா அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் சீனா அரசாங்கத்தின் கீழே இருக்கும் கம்பெனி இது. முக்கியமாக உள்ளூர் பயன்பாட்டிற்காக இது செயல்படுவதால் இதன் ராணுவ தொடர்பு பெரியதாக கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால் இப்போது இந்த கம்பெனியும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

மொத்தத்தில் இத்தனையும் நடந்தால் ராக்ஷஸ, அணுகுண்டை விட மோசமானது. அணுகுண்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அழிக்கும். ஆனால் இந்த ராக்ஷஸ ஒரு நொடியில் உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்து விடும்.

ஒவ்வொரு முறையும் ராக்ஷசனை கொல்ல கடவுள் அவதாரம் எடுப்பார். இந்த ராக்ஷசனுக்கு?


P.S. please see this news http://chinhdangvu.blogspot.in/2012/06/lawmakers-press-huawei-zte-amid-probe.html

Tuesday, June 19, 2012

LCD vs LED – IV RESPONSIVENESS பதில் செயல் முறை


திரையில் உள்ள ஒரு புள்ளி முழு வெண்மையிலிருந்து முழு கருப்பாக மாறி பின் மீண்டும் முழு வெண்மையாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் தான் பதில் செயல் முறை எனப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு இயல்பு ஆகும். ஏன் என்பதை நாம் பார்க்கும் முன் ஒரு தொலைக்காட்சி அல்லது மானிட்டர் எவ்வாறு வேலை செய்கிறது என்பது நமக்கு புரிய  வேண்டும்.

நம் வீடுகளில் உள்ள டி.வி.டி பிளேயர்களில் NTSC playback support என்று இருப்பதை பார்த்திருப்பீர்கள். நாம் நம் நாட்டில் உபயோகபடுத்தும் முறை PAL எனப்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு. நம் நாட்டில் வாங்கும் எல்லா மின்சார பொருட்களும் 50Hz எனப் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். அதே போல் நம் நாட்டில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரமும் 230V என இருக்கும். (நம் கணினியில் உள்ள SMPS பின்புறம் 220V / 110V என்ற சுவிட்ச் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதை விளையாட்டாக மாற்றி நிறைய பேர் SMPS ஐ எரித்திருக்கிறார்கள்). இந்த 50Hz-frequency என்பார்கள். அதாவது நமக்கு வரும் மின்சாரம் ஒரு நொடிக்கு 50௦ முறை நேர் மின்னோட்டதிலும் எதிர் மின்னோட்டதிலும் மாறி மாறி வருகிறது என்று பொருள். சரி இனி நாம் நம் விஷயத்திற்கு வருவோம்.

நம் கண் ஒரு படத்தை ௦.2 நொடிக்குள் கிரகித்து விடும். அதற்கும் குறைவான நேரத்தில் ஒரு படத்தை நீங்கள் உங்கள் கண்களுக்கு காட்டி மறைத்தால் நம் மூளையால் அந்த படத்தை முழுமையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. எனவே நாம் நம் கண்ணை ஏமாற்றுவதன் மூலம் நம் மூளையை ஏமாற்றலாம். எப்படி? ஒரு நகரும் படத்தை 50 படங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொரு படத்தையும் ௦.2 நொடிக்கு நம் கண் முன்னே வேகமாக காட்டினால் அது ஒரு நகரும் வீடியோவாக நம் கண்ணுக்கு தெரிகிறது. அதே படங்களை (stills) நம் கண் முன்னே 20 படங்கள் ஒரு நொடிக்கு என்று காட்டினால் இரண்டு படங்களுக்கு இடையே தெரியும் வெற்றிடத்தால் படம் நின்று நின்று போவது போலவோ அல்லது அணைந்து அணைந்து (flickering) தெரிவது போலவோ இருக்கும். எனவே ஒரு முழு வீடியோவை நாம் பார்க்க வேண்டும் என்றால் அது 20 படங்களை ஒரு நொடிக்குள் மாற்றியாக வேண்டும். அந்த கால CRT TV-க்களில் ஒரு முழு படத்தையும் 0.2 நொடிக்குள் வரைய முடியவில்லை. எனவே ஒரு படத்தையே இரண்டாக பிரித்து ஒற்றை எண்ணில் உள்ள கோடுகளை ஒரு முறையும், இரட்டை எண்ணில் உள்ள கோடுகளை ஒரு முறையும் ஆக ஒரு படத்தையே இரண்டு தடவைக் காண்பித்தார்கள். ஒரு நொடிக்கு 25 படங்கள் என்றால் மொத்தம் 50 frame-கள் ஒரு நொடிக்கு காட்டவேண்டும். அதனால் தான் நம் தொலைக்காட்சிகள் 50 frames/ second (PAL) முறை எனப்படுகின்றன. அமெரிக்கா-வில் 60 Hz உபயோகபடுத்துகிறார்கள். அதாவது அவர்கள் ஒரு நொடிக்கு 30 படங்களை காண்பிக்கிறார்கள். இந்த வித்தியாசத்தால் தான் அமெரிக்கா தொலைக்காட்சிகள் flicker இல்லாமல் துல்லியமாக இருக்கின்றன. இப்போது வரும் எல்லா தொலைக்காட்சிகளும் இரண்டு முறைகளிலும் இயங்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். நாம் மேலே பார்த்தபடி, ஒரு நொடிக்கு எவ்வளவு படங்களை வேகமாக காண்பிக்கிறோமோ அவ்வளவு நேர்த்தியான வீடியோ நமக்கு தெரியும் என்று புரிகிறது அல்லவா? இப்படி படங்களை வேகமாக காண்பிப்பதில் LCD மானிட்டரை பொறுத்த மட்டில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் CRT மானிட்டரில் இல்லை. எல்லாம் பின்னால் இருந்து வரும் ஒளியால் (ஒளி உமிழ்ப்பான் பின்னால் உள்ளது என்பதை முதலில் பார்த்தோம்.) வருகிறது. ஒரு படம் திரையில் வரைந்த பின்னால் மிக குறைந்த நேரத்தில் அந்த படம் அழிக்கப்பட்டு புதிய படம் அதே இடத்தில் வரையப்பட வேண்டும். ஆனால் LCD-இல் உள்ள கிரிஸ்டல்கள் அவ்வளவு குறைந்த நேரத்தில் மாறுவதில்லை. கிரிஸ்டல்கள் நேராகவோ, படுக்கை வாட்டிலோ இருந்தால் தான் ஒளி ஊடுருவுவது அல்லது ஒளி தடுக்கபடுவது நடக்கும். (பார்க்க http://avmcomputers.blogspot.in/2012/05/lcd-panel.html). ஒரு நொடிக்குள் 60  படங்களை வரைய வேண்டும் என்றால், ஒவ்வொரு பிக்சல்-உம் 1/60 = 16.7 மில்லி செகண்ட்-உக்குள் முழு வெண்மையில் இருந்து முழு கருப்புக்கு மாற வேண்டும். ஆனால் அவ்வளவு வேகமாக மாறுவதில்லை.

இந்த கிரிஸ்டல்கள் OFF இலிருந்து ON க்கு மாற பொதுவாக குறைந்த நேரமே எடுத்துக்கொள்கிறது. ஆனால் ON-இலிருந்து OFF-க்கு மாற சிறிது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒரு வெள்ளை புள்ளியை நீங்கள் வலது புறத்திலிருந்து இடது புறத்திற்கு வேகமாக செல்வது போல் ஒரு வீடியோ-வை இயக்கினால். அந்த வெள்ளை புள்ளிக்கு ஒரு வால் இருப்பது போன்று தோன்றும். அதே ஒரு கேம்-இல் இது மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் என்னத்தான் மிக சிறந்த மானிட்டர் வாங்கினாலும் இந்த குறை இருக்கத்தான் செய்யும்.




இந்த படத்தில் உள்ள அனிமேஷன் இயங்கும் போது அதன் நிழல்கள் பின்னால் சிறிது நேரம் கழித்து மறைவதை பாருங்கள். இது பதில் செயல் முறை அதிகமாக இருப்பதினால் வரும் குறை. கருப்பு பின்புலத்தில் வெள்ளை நகரும் படங்கள் வந்தால் இது இன்னும் மோசமாக இருக்கும். இந்த குறையை BLURRING அல்லது GHOST என்று கூறுவார்கள். பதில் செயல் முறையை milli seconds (ms) முறையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.  எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான milliseconds இருக்கிறதோ, அந்த அளவு நல்ல தெளிவான படம் கிடைக்கும்.

கம்பெனிகள் நம்மை ஏமாற்றுவது எப்படி?

எல்லா குறிப்புகளுக்கும் அவர்களுக்கு என்று தனியாக ஒரு விதியை வைத்து நம்மை ஏமாற்றுவது தான் கம்பெனிகளின் வியாபார தந்திரம். பதில் செயல் முறை என்பது ஒரு புள்ளி முழு கருப்பிலிருந்து முழு வெள்ளைக்கு மாறி பின் மீண்டும் முழு கருப்பாக எடுத்துக்கொள்ளும் நேரம் என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால் கம்பெனிகள் gray to gray என்று தங்களுக்குள்ளேயே ஒரு விதியை ஏற்படுத்திக்கொண்டு அதையே technical specification-இல் குறிப்பிடுகிறார்கள். அதாவது முழு வெள்ளை முழு கருப்பிற்கு பதில் பாதி கருப்பாகி பின் மீண்டும் வெள்ளையாகுதல். இங்கு நாம் முன்பு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். முழு வெள்ளை முழு கருப்பாக மாறுவதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். ஆனால் முழு கருப்பு முழு வெள்ளையாக உடனே ஆகிவிடும். எனவே தான் அதை முழு கருப்பு ஆக விடாமல் பாதி கருப்பு (gray) ஆக இருக்கும் போதே அதை வெள்ளையாக மாற்றி கணக்கிடுகிறார்கள். இந்த கணக்கிற்கும் உண்மையான கணக்கீடுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நமக்கு response time என்பது white-black-white –ஆ அல்லது gray to gray –ஆ என்று யாரும் சொல்லுவதில்லை. எனவே கம்பெனி சொல்லும் எந்த கணக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

யாருக்கு என்ன தரலாம்?

விளையாட்டு பிரியர்களுக்கு 16 milli seconds-க்கு குறைவான அளவுள்ள மானிட்டரும் மற்றவர்களுக்கு 16 milli seconds உள்ள மானிட்டரும் போதுமானது. ஆனால் எது வாங்கும் போதும் முடிந்தால், கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து பரிசோதனை செய்த பின் வாங்குவது நல்லது.


பொதுவாக TN பேனல்கள் குறைந்த response time உடையவை. எனவே இவைகளை நாம் gamer-களுக்கு கொடுக்கலாம். ஆனால் இவை கலரில் சிறிது குறை உடையவை.


கீழே ஒரு சில மானிட்டர்களின் response time கொடுத்துள்ளேன். இதில் G2G என்பது Gray to Gray என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


2ms G2G
     Asus MK241H, Dell SP2208WFP, Dell SP2309W, Hyundai W240D-TN, Iiyama E2201W-1, Iiyama E2201W-2, 
NEC MultiSync 70GX2 Pro, NEC MultiSync 90GX2 Pro, Samsung 206NW, Samsung 226NW, Samsung 931BF, Samsung 953BW, Samsung BX2331, Samsung C23A550U, Samsung C23A750X, Samsung C27A550U, Samsung C27A750X, Samsung P2050, Samsung P2070, Samsung P2350, Samsung P2370, Samsung P2450H, Samsung PX2370, Samsung S22A350H, Samsung S22A350H, Samsung S23A550H, Samsung S24A350H, Samsung S27A350H, Samsung S27A550H, Samsung SM2232BW, Samsung SM2232WG, Samsung SM226BW, Samsung SM226CW, Samsung SM931BW


4ms G2G


     Hyundai B91D, Samsung 730BF, Samsung 930BF, Samsung 940BW, Samsung 960BF, Samsung 960BG, Samsung SM930BF , Samsung SyncMaster 930BF


5 ms


     Acer AL2416WBsd, Acer X241wd, Acer X241Wsd, Dell E2010H, Dell E228WFP, Dell S2309W, HP w20, HP w22, HP W2207 rev. STM001, HP w2408h, Hyundai N91W, NEC LCD203WXM, NEC LCD2470WVX, Samsung 204B, Samsung 2333HD, Samsung 2343BBWX, Samsung 2433BW, Samsung 2443BW, Samsung 2443BWX, Samsung 920NW, Samsung 932N+, Samsung 933NW, Samsung 940NW, Samsung B2330, Samsung P2370HD, Samsung S22A300B, Samsung S23A300B, Samsung S24A300B, Samsung SM2033SW, Samsung SM216BW, Samsung SM223BW, Samsung SM225BW, Samsung SM2333SW, Samsung SM2343BW, Samsung SM2343BWX, Samsung SM2433BW, Samsung SM245B, Samsung SM245BW, Samsung SM2493HM, Samsung SM2693HM, Samsung SM932B, Samsung SM932B Plus, Samsung SM932B+, Samsung T220M, Samsung T240, Samsung T240HD, Samsung T240M, Samsung T27A550, Samsung XL2370HD


5ms G2G


     Samsung 940BX, Samsung S24A850DW, Samsung S27A850D, Samsung S27A850T


6ms G2G


     Acer AL2416W, Acer AL2416Ws, Acer AL2423W, Alphascan A2400W, Daewoo LCD24KAL, Dell 2407WFP, Dell 2407WFP-HC, Dell 2408WFP, Dell 2707WFP, Dell 2709W, DoubleSight DS-245W, Eizo CG222W, Eizo CG223W, Eizo CG241W, Eizo CG301W, Eizo ColorEdge CG222W, Eizo FlexScan S2242W-H, Eizo FlexScan S2243W, Eizo FlexScan SX2461W, Eizo S2231W, Eizo S2233W, Eizo S2411W, Eizo SX2262W, Eizo SX3031W, Fujitsu P24W-5 ECO, Fujitsu-Siemens P24-1W, Fujitsu-Siemens S24-1W, Gateway FPD2485W, Gateway XHD3000, HP LP2275w, HP LP2465, HP LP2465w, Hyundai W240D-PVA, Hyundai W241D, LaCie 324, LaCie 724, LaCie 730, Lenovo L220x, NEC LCD2470WNX, Samsung 2263PW, Samsung 244T, Samsung 305T, Samsung 305T+, Samsung 770P, Samsung 917P, Samsung 970P, Samsung 971P, Samsung 971P+, Samsung SM275T, Samsung SM275T Plus, Samsung SM305T, Samsung SM305T+, Samsung XL24, Samsung XL30, Samsung 245T, Samsung SM245T, Planar PX2411W

8ms 


     Acer 6935G-944G32BN, BenQ FP937s+, Dell 1907FP, Dell 1907FPc, Eizo S1961, Fujitsu-Siemens T19-2, Hanns-G HW191D, HP Compaq 6720s, HP ProBook 4520s, HP ProBook 6550b WD709ET, Hyundai B90A, Hyundai L90D+, Iiyama E480S-B, Iiyama E480S-S, Samsung 320P, Samsung 713N, Samsung 720N, Samsung 721SA, Samsung 740N, Samsung 901B, Samsung 901N, Samsung 913B, Samsung 913N, Samsung 915N, Samsung 930B, Samsung 940B, Samsung 940MW, Samsung 940N, Samsung 950B, Samsung LE-32R71B, Sony Bravia KDL-40V2500, Sony KDL-V40XBR1, Toshiba 40RV525U, VideoSeven LTV40DA


8msG2G


     Acer AL1922As, Acer AL1952, Amitech 32L940, Bang & Olufsen Beovision 7, BenQ FP91E, Eizo CE210W, Eizo CE210W-K, Eizo CE240W, Eizo CE240W-K, Eizo S1731, Eizo S1731AS, Eizo S1731AS-K, Eizo S1731-K, Eizo S1931AS, Eizo S1931AS-K, Eizo S2100, Eizo S2100-K, Eizo S2110W, Eizo S2110W-K, Eizo S2111W, Eizo S2410W, Eizo S2410W-K, Fujitsu-Siemens P19-2, Fujitsu-Siemens P19-3, Gateway FPD2185W, HP F2105, Hyundai Q400, Iiyama ProLite E511S-B2U, Iiyama ProLite E511S-W2U, Marantz 2601, NEC LCD1990SX, NEC LCD2170NX, NEC LCD2170NX-BK, NEC LCD2190UXp, NEC LCD2190UXp-BK, NEC LCD4610, NEC MDview 193, NEC P461, NEC PhotoEdition 1990PE, NEC PhotoEdition 2190PE, NEC SpectraView 1990p, NEC SpectraView 2190p, Samsung 173P+, Samsung 193P+, Samsung 214T, Samsung 215TW, Samsung 2333T, Samsung 400P, Samsung 400Pn, Samsung 460P, Samsung 913TM, Samsung 931MP, Samsung F2080, Samsung F2370H, Samsung F2380, Samsung F2380MX, Samsung LE-23R41B, Samsung LE-23R51B, Samsung LE-26M51B, Samsung LE-26R41B, Samsung LE-26R51B, Samsung LE-32M51B, Samsung LE-32M61B, Samsung LE-32R41B, Samsung LE-32R51B, Samsung LE-40M61B, Samsung LE-40R51B, Samsung MD230, Samsung SM2333T, Sony KDL-26V2000, Sony KDL-32V2000, Sony KDL-40V2000, Sony KDL-V32XBR1, Sony KLD-46X2000, Sony KLV-S23A10, Sony KLV-S26A10E, Sony KLV-S32A10E, Sony KLV-S40A10E, Sony KLV-V26A10E, Sony KLV-W40A10, ViewSonic NextVision N4060W, ViewSonic VP2130B, ViewSonic VP2130b


12ms


     Dell 1704FPT, Hyundai L70S+, Hyundai Q17+, Samsung 172X, 710MP, 710N, 710T, Sony KLV-V32A10E, Sony KLV-V40A10E


16ms


     HP EliteBook 8530w, HP L2105, Lenovo L201p, NEC LCD5710, NEC P221W, Samsung 204T, Samsung 204TS, Samsung 242MP, Samsung 710V, Samsung LW-17N23N, Dell 2405FPW, Dell 2007FP, Dell 2007WFP


20ms 


     Acer AL1922hm, Acer AL1922hs, Dell 1907FPV, Eizo L760t-c, Eizo L760t-c-k, Eizo S1721, Eizo S1721AS, Eizo S1721AS-K, Eizo S1721-K, Eizo S1921, Eizo S1921AS, Eizo S1921AS-K, Eizo S1921-K, Lenovo L192p, NEC EA191M, NEC LCD1990FXp, Samsung 940T, Xerox XA7-19i, NEC LCD1970NXP, NEC LCD1970NXP-BK, Dell 1905FP


25ms


     BenQ FP72V, Dell 1704FPV, Dell 1706FP, Dell 1707FPV, Dell 1906FP, Dell 1906FPT, Dell 1906FPT, Dell W1900, Eizo L557, Eizo L560t-c, Eizo L560t-c-k, Eizo L568, Eizo L767, Eizo L768, Eizo L768-AS, Eizo L788, Eizo L795, Hyundai L90D, Mitsubishi SX98LCD, NEC EX231Wp, NEC LCD1980SX, Samsung 171N, Samsung 171P, Samsung 172N, Samsung 172T, Samsung 172w, Samsung 173P, Samsung 173T, Samsung 181T, Samsung 191T, Samsung 192T, Samsung 194T, Samsung 211MP, Samsung 213T, Samsung 240T, Samsung 241MP, Samsung 720T, Samsung 740T, Samsung 910M, Samsung 910N, Samsung 910T, Samsung 910TM, Samsung 920T , Samsung 930MP, Samsung LE-15S51B, Samsung LW-15M23C, Samsung SM193T, Samsung SM213T, Samsung SM943T, Samtron 73V, ViewSonic VP211B, Samsung 193P