Tuesday, May 29, 2012

LCD – பின்னால் உள்ள உண்மைகள்.- I


LCD – Liquid Crystal Display (திரவ படிக காட்சி)


சிறுது காலத்திற்கு முன் நமது காண்பித் மெயில் க்ரூப்பில் LCD Panel கள் பற்றி சில கேள்விகள் வந்தன. LCD-யா LED-யா எது உண்மை. என்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்கள், நமது வாடிக்கையாளருக்கும் நமக்கும். அது பற்றி அப்பவே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

LCD கண்டுபிடிக்கபட்டதே ஒரு சுவாரசியமான கதை. LCD-ஐ நமக்கு தந்தது கொழுப்பு தான். ஆஸ்திரேலியாவை சேர்ந்த friedrich reinitzer என்ற ஒரு ஆராய்ச்சியாளர் காரட்-இன் கொழுப்பை ஆராய்ச்சி செய்தார். அதன் இயற்பியல் தன்மையை ஆராய்வதற்காக அதன் உருகும் வெப்ப அளவையும், ஆவியாகும் வெப்ப அளவையும் கண்டுபிடிப்பதற்காக அதை சூடு படுத்தினார். ஒரு பொருள் தின்ம தன்மையில் இருந்து நீர்மமாதலை நாம் உருகும் தன்மை என்கிறோம். ஆனால் இந்த கொழுப்புகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உருக ஆரம்பித்தன. ஆனால் நீரின் இயற்பியல் பண்புகளை அது கொண்டிருக்கவில்லை. நீர்ம தன்மையின் போது அதன் மூலக்கூறுகள் வெவேறு திசைகளை நோக்கி கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதன் மூலக்கூறுகள் ஒரே திசையை நோக்கி கொண்டிருந்தன. மூலக்கூறுகள் ஒரே திசையை நோக்கி இருப்பது தின்மங்களின் இயற்பியல் விதி. அப்படி ஆனால் அது திண்மமா இல்லை நீர்மமா என்று ஒரு குழப்பம் அவருக்கு உண்டானது. அதை மேலும் மேலும் சூடக்கும்போது தான் அது முழு நீர்மமாக மாறியது. அதாவது அந்த கொழுப்புக்கு இரண்டு உருகும் வெப்ப நிலையை கொண்டிருந்தது. அந்த இரண்டு உருகும் வெப்ப நிலைக்கு இடைப்பட்ட நிலையை தான் liquid crystal என்று பெயரிடப்பட்டது. அதாவது இது ஒரு அர்த்தநாரீஸ்வரர் நிலை.

 

LCD எப்படி இயங்குகிறது?


LCD எவ்வாறு செயல்படுகிறது என்பது ஒன்றும் மிக பெரிய கம்ப சூத்திரம் இல்லை. நாம் தினமும் உபயோகபடுத்தும் சூரிய கண்ணாடிகள் Sun Glasses செய்ய உபயோகிக்கும் அதே முறை தான் LCD –க்கும். நம் சூரிய கண்ணாடிகள் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.


 சூரிய ஒளி மண்ணில் பட்டவுடன் அது எல்லா கோணங்களிலும் எதிரொலிக்கிறது. நம் சூரிய ஒளி கண்ணாடியில் உள்ள பிளாஸ்டிக் கோட்டிங் இங்கு ஒரு liquid crystal போல் செயல்பட்டு, அதற்கு நேர கோணத்திலிருந்து வரும் ஒளியை மட்டும் நம் கண்ணுக்கு அனுப்புகிறது. மற்ற ஒளிகளை திருப்பி அனுப்பி விடுகிறது.
 இதே technique தான் LCD லும் உப்யோகபடுத்தபடுகிறது.

மேலே உள்ள படத்தில் உள்ள polarizing filters என்பது நமது சூரிய கண்ணாடிகள் போன்றவை. கிரிஸ்டல்கள் சுருள் போல் இருக்கும் போது ஒளி திரும்பி இரண்டாவதாக இருக்கும் Polarised filter-க்கு perpendicular –ஆக விழும். நம் சூரிய கண்ணாடி போலவே இந்த ஒளி நேரே வருவதால் அதை தன்னை ஊடுருவ விட்டுவிடும். அந்த ஒளி வெளிய உள்ள சிகப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ண பில்டர்கள் மூலம் அந்த வண்ணமாக நம் கண்களுக்கு வருகிறது. அதே கிரிஸ்டல் சார்ஜ் செய்யப்படும் போது கிரிஸ்டல்கள் சுருளாக இருப்பது நேராக மாறி விடுவதால் ஒளி polarized filter-க்கு parallel-ஆக வருவதால் ஒளியை ஊடுருவ விடாது. எனவே இந்த புள்ளி நமக்கு கருப்பாக தெரியும்.



 

    


 ஒளி ஊடுருவி திரையில் வெளிச்சம் தெரிகிறது.             ஒளி ஊடுருவாததால் திரை
                                                                                                               கருப்பாக இருக்கிறது

LCD Vs LED (LED Backlight)


Light Source என்ற ஒளி உமிழ்ப்பானை பார்த்தோம் அல்லவா? பழைய LCD திரையில் அது ஒரு நீளமான Cold Cathode Florescent Lamp (CCFL) ஆக இருந்தது. இப்போது LED பல்பு ஆக உள்ளது.

 



மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது தான் LED பல்பு. பல LED களை ஒன்றாக இணைத்து ஒரு tubelight போல எரிய விட்டிருக்கிறார்கள்.

சரி. LCD-இல் உள்ள CCFL-க்கும் LED க்கும் என்ன வித்தியாசம்.

CCFL –இல் ஒளி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி எரியும். எனவே கருப்பு இடங்கள் சிறிது வெள்ளையாக தெரியும். LCD monitor-யும் LED monitor-யும் அருகருகே வைத்து பின்பக்கத்தை கருப்பாக மாற்றினால் LED-இல் அது முழு கருப்பாகவும், LCD-இல் சிறிது ஒளியுடனும் தெரியும். CCFL என்பது நம் வீட்டில் உபயோகபடுத்தும் ட்யூப் லைட் போன்றது. ஆனால் LED-இல் நீங்கள் வேண்டும் இடத்தில உள்ள LEDஐ நிறுத்தி (OFF) விட முடியும். எனவே அந்த இடம் முழு கருப்பாக இருக்கும்.

 
அடுத்தது Brightness வெளிச்சம். LED மானிடர்கள் LCD மானிடர்களை விட மிக அதிக வெளிச்சம் தருபவை. எனவே இவற்றின் luminous மிக அதிகம்.

Environment Friendly : LCD மானிடர்-இல் உள்ள CCFL பல்புகள் மெர்குரி கொண்டவை. எனவே அவை தயாரிக்கும் போதும், மறு சுழற்சியின் போதும் சுற்றுப்புற சூழ்நிலைக்கு மாசு ஏற்படுத்துகின்றன. LED –இன் வெப்ப உமிழ்தலும் மிகவும் சிறிது.

Power Consumption: LED மானிடர்கள் LCD-ஐ விட 40% குறைவான மின்சாரத்தையே உபயோகபடுத்துகின்றன.

விலை : LED மானிடர்கள் விலை மிகவும் குறைவு.

எடை : LED மானிடர்கள் எடை மிகவும் குறைவு.

அளவு : LED மானிடர்கள் அளவு மிகவும் குறைவு. Sleek model

நீடித்த உழைப்பு : CCFL பல்புகள் 100000 மணி நேரம் உழைக்கும் என்று கம்பனிகள் கூறினாலும் 20000 மணி நேரத்திற்கு பிறகு ஒளி மங்க தொடங்கிவிடுகிறன.
இந்த LED backlight-இலேயே பல வகைகள் உள்ளன. இதை இரு பெரு வகையாக பிரிக்கலாம். ஒன்று WLED எனப்படும் White LED, மற்றொன்று RGB LED.

நாம் காணும் LCD திரையின் பின் பக்கம் முழுவதும் ஒவ்வொரு பிக்சல் பின்னாலும் ஒரு வெள்ளை LED இருக்கும். ஆனால் இந்த முறையை நம் மானிடர்-களில் உபயோகபடுத்துவதில்லை. அதற்கு பதில் நான்கு ஓரங்களிலும் LED பார்டர் கட்டி எரிய விட்டிருக்கிறார்கள். WLED-ஐ தான் நாம் edge LED என்று கூறுகிறோம். இதனால் பணமும், மானிடர்-இன் அகலமும் குறைகிறது. இப்போது இந்த technology மேலும் முன்னேறி மானிடர்-இன் கீழ் பகுதியில் மட்டும் ஒரே ஒரு வரி LED ஸ்ட்ரிப் மட்டும் வைத்திருக்கிறார்கள். அதன் படத்தை தான் நாம் மேலே பார்த்தோம். இப்போது மார்க்கெட் இல் இருக்கும் பெரும்பான்மையான மிக குறைந்த விலை மானிடர்-கள் இந்த வகையில் தான் வருகிறது.

மற்றொரு வகை மானிடர் RGB LED என்பது ஒவ்வொரு pixel-ம் சிவப்பு, பச்சை, நீலம் ஏன மூன்று நிற LED களால் திரை-இன் பின்புறம் முழுவதும் நிரப்பபட்டிருக்கும். இந்த முறை மானிடர்-களில் மிக மிக சரியான நிறங்களை காண முடியும். ஆனால் இந்த வகை மானிடர்-கள் விலை மிக அதிகம் என்பதால் அவ்வளவாக மார்க்கெட்-இல் கிடைப்பதில்லை.

 
TFT – Thin film Transistor LCD - இதுவும் ஒரு LCD மானிடர் தான். ஆனால் இந்த வகையில் ஒவ்வொரு செல்லும் ஒரு ட்ரான்ஸ்சிஸ்டர் மூலம் on / off செய்யபடுகிறது.

 
 
 


 இதோடு முடியவில்லை. இவை எல்லாம் நமக்கு பரிச்சியமான சில விஷயங்கள். ஆனால் நமக்கு சொல்லாமல் கம்பெனி-கள் செய்யும் மேலும் பல விஷ்யங்களை பிறகு பார்க்கலாம்.







 

.