Tuesday, June 19, 2012

LCD vs LED – IV RESPONSIVENESS பதில் செயல் முறை


திரையில் உள்ள ஒரு புள்ளி முழு வெண்மையிலிருந்து முழு கருப்பாக மாறி பின் மீண்டும் முழு வெண்மையாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் தான் பதில் செயல் முறை எனப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு இயல்பு ஆகும். ஏன் என்பதை நாம் பார்க்கும் முன் ஒரு தொலைக்காட்சி அல்லது மானிட்டர் எவ்வாறு வேலை செய்கிறது என்பது நமக்கு புரிய  வேண்டும்.

நம் வீடுகளில் உள்ள டி.வி.டி பிளேயர்களில் NTSC playback support என்று இருப்பதை பார்த்திருப்பீர்கள். நாம் நம் நாட்டில் உபயோகபடுத்தும் முறை PAL எனப்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு. நம் நாட்டில் வாங்கும் எல்லா மின்சார பொருட்களும் 50Hz எனப் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். அதே போல் நம் நாட்டில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரமும் 230V என இருக்கும். (நம் கணினியில் உள்ள SMPS பின்புறம் 220V / 110V என்ற சுவிட்ச் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதை விளையாட்டாக மாற்றி நிறைய பேர் SMPS ஐ எரித்திருக்கிறார்கள்). இந்த 50Hz-frequency என்பார்கள். அதாவது நமக்கு வரும் மின்சாரம் ஒரு நொடிக்கு 50௦ முறை நேர் மின்னோட்டதிலும் எதிர் மின்னோட்டதிலும் மாறி மாறி வருகிறது என்று பொருள். சரி இனி நாம் நம் விஷயத்திற்கு வருவோம்.

நம் கண் ஒரு படத்தை ௦.2 நொடிக்குள் கிரகித்து விடும். அதற்கும் குறைவான நேரத்தில் ஒரு படத்தை நீங்கள் உங்கள் கண்களுக்கு காட்டி மறைத்தால் நம் மூளையால் அந்த படத்தை முழுமையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. எனவே நாம் நம் கண்ணை ஏமாற்றுவதன் மூலம் நம் மூளையை ஏமாற்றலாம். எப்படி? ஒரு நகரும் படத்தை 50 படங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொரு படத்தையும் ௦.2 நொடிக்கு நம் கண் முன்னே வேகமாக காட்டினால் அது ஒரு நகரும் வீடியோவாக நம் கண்ணுக்கு தெரிகிறது. அதே படங்களை (stills) நம் கண் முன்னே 20 படங்கள் ஒரு நொடிக்கு என்று காட்டினால் இரண்டு படங்களுக்கு இடையே தெரியும் வெற்றிடத்தால் படம் நின்று நின்று போவது போலவோ அல்லது அணைந்து அணைந்து (flickering) தெரிவது போலவோ இருக்கும். எனவே ஒரு முழு வீடியோவை நாம் பார்க்க வேண்டும் என்றால் அது 20 படங்களை ஒரு நொடிக்குள் மாற்றியாக வேண்டும். அந்த கால CRT TV-க்களில் ஒரு முழு படத்தையும் 0.2 நொடிக்குள் வரைய முடியவில்லை. எனவே ஒரு படத்தையே இரண்டாக பிரித்து ஒற்றை எண்ணில் உள்ள கோடுகளை ஒரு முறையும், இரட்டை எண்ணில் உள்ள கோடுகளை ஒரு முறையும் ஆக ஒரு படத்தையே இரண்டு தடவைக் காண்பித்தார்கள். ஒரு நொடிக்கு 25 படங்கள் என்றால் மொத்தம் 50 frame-கள் ஒரு நொடிக்கு காட்டவேண்டும். அதனால் தான் நம் தொலைக்காட்சிகள் 50 frames/ second (PAL) முறை எனப்படுகின்றன. அமெரிக்கா-வில் 60 Hz உபயோகபடுத்துகிறார்கள். அதாவது அவர்கள் ஒரு நொடிக்கு 30 படங்களை காண்பிக்கிறார்கள். இந்த வித்தியாசத்தால் தான் அமெரிக்கா தொலைக்காட்சிகள் flicker இல்லாமல் துல்லியமாக இருக்கின்றன. இப்போது வரும் எல்லா தொலைக்காட்சிகளும் இரண்டு முறைகளிலும் இயங்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். நாம் மேலே பார்த்தபடி, ஒரு நொடிக்கு எவ்வளவு படங்களை வேகமாக காண்பிக்கிறோமோ அவ்வளவு நேர்த்தியான வீடியோ நமக்கு தெரியும் என்று புரிகிறது அல்லவா? இப்படி படங்களை வேகமாக காண்பிப்பதில் LCD மானிட்டரை பொறுத்த மட்டில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் CRT மானிட்டரில் இல்லை. எல்லாம் பின்னால் இருந்து வரும் ஒளியால் (ஒளி உமிழ்ப்பான் பின்னால் உள்ளது என்பதை முதலில் பார்த்தோம்.) வருகிறது. ஒரு படம் திரையில் வரைந்த பின்னால் மிக குறைந்த நேரத்தில் அந்த படம் அழிக்கப்பட்டு புதிய படம் அதே இடத்தில் வரையப்பட வேண்டும். ஆனால் LCD-இல் உள்ள கிரிஸ்டல்கள் அவ்வளவு குறைந்த நேரத்தில் மாறுவதில்லை. கிரிஸ்டல்கள் நேராகவோ, படுக்கை வாட்டிலோ இருந்தால் தான் ஒளி ஊடுருவுவது அல்லது ஒளி தடுக்கபடுவது நடக்கும். (பார்க்க http://avmcomputers.blogspot.in/2012/05/lcd-panel.html). ஒரு நொடிக்குள் 60  படங்களை வரைய வேண்டும் என்றால், ஒவ்வொரு பிக்சல்-உம் 1/60 = 16.7 மில்லி செகண்ட்-உக்குள் முழு வெண்மையில் இருந்து முழு கருப்புக்கு மாற வேண்டும். ஆனால் அவ்வளவு வேகமாக மாறுவதில்லை.

இந்த கிரிஸ்டல்கள் OFF இலிருந்து ON க்கு மாற பொதுவாக குறைந்த நேரமே எடுத்துக்கொள்கிறது. ஆனால் ON-இலிருந்து OFF-க்கு மாற சிறிது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒரு வெள்ளை புள்ளியை நீங்கள் வலது புறத்திலிருந்து இடது புறத்திற்கு வேகமாக செல்வது போல் ஒரு வீடியோ-வை இயக்கினால். அந்த வெள்ளை புள்ளிக்கு ஒரு வால் இருப்பது போன்று தோன்றும். அதே ஒரு கேம்-இல் இது மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் என்னத்தான் மிக சிறந்த மானிட்டர் வாங்கினாலும் இந்த குறை இருக்கத்தான் செய்யும்.




இந்த படத்தில் உள்ள அனிமேஷன் இயங்கும் போது அதன் நிழல்கள் பின்னால் சிறிது நேரம் கழித்து மறைவதை பாருங்கள். இது பதில் செயல் முறை அதிகமாக இருப்பதினால் வரும் குறை. கருப்பு பின்புலத்தில் வெள்ளை நகரும் படங்கள் வந்தால் இது இன்னும் மோசமாக இருக்கும். இந்த குறையை BLURRING அல்லது GHOST என்று கூறுவார்கள். பதில் செயல் முறையை milli seconds (ms) முறையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.  எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான milliseconds இருக்கிறதோ, அந்த அளவு நல்ல தெளிவான படம் கிடைக்கும்.

கம்பெனிகள் நம்மை ஏமாற்றுவது எப்படி?

எல்லா குறிப்புகளுக்கும் அவர்களுக்கு என்று தனியாக ஒரு விதியை வைத்து நம்மை ஏமாற்றுவது தான் கம்பெனிகளின் வியாபார தந்திரம். பதில் செயல் முறை என்பது ஒரு புள்ளி முழு கருப்பிலிருந்து முழு வெள்ளைக்கு மாறி பின் மீண்டும் முழு கருப்பாக எடுத்துக்கொள்ளும் நேரம் என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால் கம்பெனிகள் gray to gray என்று தங்களுக்குள்ளேயே ஒரு விதியை ஏற்படுத்திக்கொண்டு அதையே technical specification-இல் குறிப்பிடுகிறார்கள். அதாவது முழு வெள்ளை முழு கருப்பிற்கு பதில் பாதி கருப்பாகி பின் மீண்டும் வெள்ளையாகுதல். இங்கு நாம் முன்பு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். முழு வெள்ளை முழு கருப்பாக மாறுவதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். ஆனால் முழு கருப்பு முழு வெள்ளையாக உடனே ஆகிவிடும். எனவே தான் அதை முழு கருப்பு ஆக விடாமல் பாதி கருப்பு (gray) ஆக இருக்கும் போதே அதை வெள்ளையாக மாற்றி கணக்கிடுகிறார்கள். இந்த கணக்கிற்கும் உண்மையான கணக்கீடுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நமக்கு response time என்பது white-black-white –ஆ அல்லது gray to gray –ஆ என்று யாரும் சொல்லுவதில்லை. எனவே கம்பெனி சொல்லும் எந்த கணக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

யாருக்கு என்ன தரலாம்?

விளையாட்டு பிரியர்களுக்கு 16 milli seconds-க்கு குறைவான அளவுள்ள மானிட்டரும் மற்றவர்களுக்கு 16 milli seconds உள்ள மானிட்டரும் போதுமானது. ஆனால் எது வாங்கும் போதும் முடிந்தால், கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து பரிசோதனை செய்த பின் வாங்குவது நல்லது.


பொதுவாக TN பேனல்கள் குறைந்த response time உடையவை. எனவே இவைகளை நாம் gamer-களுக்கு கொடுக்கலாம். ஆனால் இவை கலரில் சிறிது குறை உடையவை.


கீழே ஒரு சில மானிட்டர்களின் response time கொடுத்துள்ளேன். இதில் G2G என்பது Gray to Gray என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


2ms G2G
     Asus MK241H, Dell SP2208WFP, Dell SP2309W, Hyundai W240D-TN, Iiyama E2201W-1, Iiyama E2201W-2, 
NEC MultiSync 70GX2 Pro, NEC MultiSync 90GX2 Pro, Samsung 206NW, Samsung 226NW, Samsung 931BF, Samsung 953BW, Samsung BX2331, Samsung C23A550U, Samsung C23A750X, Samsung C27A550U, Samsung C27A750X, Samsung P2050, Samsung P2070, Samsung P2350, Samsung P2370, Samsung P2450H, Samsung PX2370, Samsung S22A350H, Samsung S22A350H, Samsung S23A550H, Samsung S24A350H, Samsung S27A350H, Samsung S27A550H, Samsung SM2232BW, Samsung SM2232WG, Samsung SM226BW, Samsung SM226CW, Samsung SM931BW


4ms G2G


     Hyundai B91D, Samsung 730BF, Samsung 930BF, Samsung 940BW, Samsung 960BF, Samsung 960BG, Samsung SM930BF , Samsung SyncMaster 930BF


5 ms


     Acer AL2416WBsd, Acer X241wd, Acer X241Wsd, Dell E2010H, Dell E228WFP, Dell S2309W, HP w20, HP w22, HP W2207 rev. STM001, HP w2408h, Hyundai N91W, NEC LCD203WXM, NEC LCD2470WVX, Samsung 204B, Samsung 2333HD, Samsung 2343BBWX, Samsung 2433BW, Samsung 2443BW, Samsung 2443BWX, Samsung 920NW, Samsung 932N+, Samsung 933NW, Samsung 940NW, Samsung B2330, Samsung P2370HD, Samsung S22A300B, Samsung S23A300B, Samsung S24A300B, Samsung SM2033SW, Samsung SM216BW, Samsung SM223BW, Samsung SM225BW, Samsung SM2333SW, Samsung SM2343BW, Samsung SM2343BWX, Samsung SM2433BW, Samsung SM245B, Samsung SM245BW, Samsung SM2493HM, Samsung SM2693HM, Samsung SM932B, Samsung SM932B Plus, Samsung SM932B+, Samsung T220M, Samsung T240, Samsung T240HD, Samsung T240M, Samsung T27A550, Samsung XL2370HD


5ms G2G


     Samsung 940BX, Samsung S24A850DW, Samsung S27A850D, Samsung S27A850T


6ms G2G


     Acer AL2416W, Acer AL2416Ws, Acer AL2423W, Alphascan A2400W, Daewoo LCD24KAL, Dell 2407WFP, Dell 2407WFP-HC, Dell 2408WFP, Dell 2707WFP, Dell 2709W, DoubleSight DS-245W, Eizo CG222W, Eizo CG223W, Eizo CG241W, Eizo CG301W, Eizo ColorEdge CG222W, Eizo FlexScan S2242W-H, Eizo FlexScan S2243W, Eizo FlexScan SX2461W, Eizo S2231W, Eizo S2233W, Eizo S2411W, Eizo SX2262W, Eizo SX3031W, Fujitsu P24W-5 ECO, Fujitsu-Siemens P24-1W, Fujitsu-Siemens S24-1W, Gateway FPD2485W, Gateway XHD3000, HP LP2275w, HP LP2465, HP LP2465w, Hyundai W240D-PVA, Hyundai W241D, LaCie 324, LaCie 724, LaCie 730, Lenovo L220x, NEC LCD2470WNX, Samsung 2263PW, Samsung 244T, Samsung 305T, Samsung 305T+, Samsung 770P, Samsung 917P, Samsung 970P, Samsung 971P, Samsung 971P+, Samsung SM275T, Samsung SM275T Plus, Samsung SM305T, Samsung SM305T+, Samsung XL24, Samsung XL30, Samsung 245T, Samsung SM245T, Planar PX2411W

8ms 


     Acer 6935G-944G32BN, BenQ FP937s+, Dell 1907FP, Dell 1907FPc, Eizo S1961, Fujitsu-Siemens T19-2, Hanns-G HW191D, HP Compaq 6720s, HP ProBook 4520s, HP ProBook 6550b WD709ET, Hyundai B90A, Hyundai L90D+, Iiyama E480S-B, Iiyama E480S-S, Samsung 320P, Samsung 713N, Samsung 720N, Samsung 721SA, Samsung 740N, Samsung 901B, Samsung 901N, Samsung 913B, Samsung 913N, Samsung 915N, Samsung 930B, Samsung 940B, Samsung 940MW, Samsung 940N, Samsung 950B, Samsung LE-32R71B, Sony Bravia KDL-40V2500, Sony KDL-V40XBR1, Toshiba 40RV525U, VideoSeven LTV40DA


8msG2G


     Acer AL1922As, Acer AL1952, Amitech 32L940, Bang & Olufsen Beovision 7, BenQ FP91E, Eizo CE210W, Eizo CE210W-K, Eizo CE240W, Eizo CE240W-K, Eizo S1731, Eizo S1731AS, Eizo S1731AS-K, Eizo S1731-K, Eizo S1931AS, Eizo S1931AS-K, Eizo S2100, Eizo S2100-K, Eizo S2110W, Eizo S2110W-K, Eizo S2111W, Eizo S2410W, Eizo S2410W-K, Fujitsu-Siemens P19-2, Fujitsu-Siemens P19-3, Gateway FPD2185W, HP F2105, Hyundai Q400, Iiyama ProLite E511S-B2U, Iiyama ProLite E511S-W2U, Marantz 2601, NEC LCD1990SX, NEC LCD2170NX, NEC LCD2170NX-BK, NEC LCD2190UXp, NEC LCD2190UXp-BK, NEC LCD4610, NEC MDview 193, NEC P461, NEC PhotoEdition 1990PE, NEC PhotoEdition 2190PE, NEC SpectraView 1990p, NEC SpectraView 2190p, Samsung 173P+, Samsung 193P+, Samsung 214T, Samsung 215TW, Samsung 2333T, Samsung 400P, Samsung 400Pn, Samsung 460P, Samsung 913TM, Samsung 931MP, Samsung F2080, Samsung F2370H, Samsung F2380, Samsung F2380MX, Samsung LE-23R41B, Samsung LE-23R51B, Samsung LE-26M51B, Samsung LE-26R41B, Samsung LE-26R51B, Samsung LE-32M51B, Samsung LE-32M61B, Samsung LE-32R41B, Samsung LE-32R51B, Samsung LE-40M61B, Samsung LE-40R51B, Samsung MD230, Samsung SM2333T, Sony KDL-26V2000, Sony KDL-32V2000, Sony KDL-40V2000, Sony KDL-V32XBR1, Sony KLD-46X2000, Sony KLV-S23A10, Sony KLV-S26A10E, Sony KLV-S32A10E, Sony KLV-S40A10E, Sony KLV-V26A10E, Sony KLV-W40A10, ViewSonic NextVision N4060W, ViewSonic VP2130B, ViewSonic VP2130b


12ms


     Dell 1704FPT, Hyundai L70S+, Hyundai Q17+, Samsung 172X, 710MP, 710N, 710T, Sony KLV-V32A10E, Sony KLV-V40A10E


16ms


     HP EliteBook 8530w, HP L2105, Lenovo L201p, NEC LCD5710, NEC P221W, Samsung 204T, Samsung 204TS, Samsung 242MP, Samsung 710V, Samsung LW-17N23N, Dell 2405FPW, Dell 2007FP, Dell 2007WFP


20ms 


     Acer AL1922hm, Acer AL1922hs, Dell 1907FPV, Eizo L760t-c, Eizo L760t-c-k, Eizo S1721, Eizo S1721AS, Eizo S1721AS-K, Eizo S1721-K, Eizo S1921, Eizo S1921AS, Eizo S1921AS-K, Eizo S1921-K, Lenovo L192p, NEC EA191M, NEC LCD1990FXp, Samsung 940T, Xerox XA7-19i, NEC LCD1970NXP, NEC LCD1970NXP-BK, Dell 1905FP


25ms


     BenQ FP72V, Dell 1704FPV, Dell 1706FP, Dell 1707FPV, Dell 1906FP, Dell 1906FPT, Dell 1906FPT, Dell W1900, Eizo L557, Eizo L560t-c, Eizo L560t-c-k, Eizo L568, Eizo L767, Eizo L768, Eizo L768-AS, Eizo L788, Eizo L795, Hyundai L90D, Mitsubishi SX98LCD, NEC EX231Wp, NEC LCD1980SX, Samsung 171N, Samsung 171P, Samsung 172N, Samsung 172T, Samsung 172w, Samsung 173P, Samsung 173T, Samsung 181T, Samsung 191T, Samsung 192T, Samsung 194T, Samsung 211MP, Samsung 213T, Samsung 240T, Samsung 241MP, Samsung 720T, Samsung 740T, Samsung 910M, Samsung 910N, Samsung 910T, Samsung 910TM, Samsung 920T , Samsung 930MP, Samsung LE-15S51B, Samsung LW-15M23C, Samsung SM193T, Samsung SM213T, Samsung SM943T, Samtron 73V, ViewSonic VP211B, Samsung 193P








Monday, June 4, 2012

LCD vs LED - Viewing Angle பார்வைக் கோணம்.


பழைய லாப்டாப்களில் நீங்கள் இந்த பிரச்சினையை பார்த்திருக்கலாம். நாம் நின்றுக் கொண்டோ, பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டோ பார்த்தால் மானிட்டரில் எதுவுமே தெரியாது. இந்த பிரச்சனையை பார்வைக் கோணம் பிரச்சினை என்கிறோம். இதன் காரணம் என்ன? பழைய CRT மானிட்டர்களில் ஒளி என்பது நமது திரையில் உருவாகிறது. ஆனால் LCD மானிட்டரில் திரைக்கு பின்னால் தான் ஒளி உருவாகிறது. ஒளி நேர் கோட்டில் வரும்போது தான் திரையை விட்டு வெளியேறுகிறது என்று பார்த்தோம் அல்லவா? அது தான் இங்கு பிரச்சினை. ஒளி நேர் கோட்டில் வெளியேறுவதால் நாம் மானிட்டரின் நேர் எதிரே உட்கார்ந்து இருக்கும் போது மட்டும் தான் நமக்கு சரியான படம் கிடைக்கும். நாம் மானிட்டரின் பக்க வாட்டிலோ, மேல் கீழோ பார்க்கும்போது நமக்கு படம் நிறம் மாறி தான் தெரியும். உண்மையில் இதற்கு காரணம் நிறம் மாற்றமல்ல. Contrast ratio மாறுவது தான்.
Viewing angle-ஐ இரண்டு எண்களில் கூறுவார்கள். உதாரணத்திற்கு 170/170. முதலில் உள்ள எண் பக்கவாட்டு கோணத்தையும் அடுத்து உள்ளது மேல் கீழ் கோணத்தையும் குறிக்கிறது. அதாவது நீங்கள் மானிட்டருக்கு நேரே 0 டிகிரியில் உடகார்ந்து கொண்டு பார்க்கும் படத்தின் தரம் 170/2 = 85 டிகிரி பக்க வாட்டிலோ மேலேயோ பார்க்கும் போது குறையாது என்பது தான்.
இதை எப்படி கணக்கிடுகிறார்கள். நீங்கள் படத்தை நேராக பார்க்கும் பொழுது அதன் contrast ratio 1000:1  என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து நீங்கள் விலகி செல்கிறீர்கள் என்றால் நீங்கள் நேராக பார்க்கும் படத்தின் வெளிச்சம் பாதி அளவு குறைவாக வரும் கோணம் தான் பார்வைக் கோணம். ஆனால் நம் கம்பெனிகள் 5:1, 10:1 contrast ratio வரும் வரை பார்வைக் கோணம் என்று கணக்கிடுகிறார்கள். எனவே மானிட்டர் வாங்கும் பொழுது, நேரடியாக உங்கள் கண்ணால் காண்பது மட்டுமே மெய். மற்றதெல்லாம் வெறும் பொய்.
நீங்கள் பெரிய மானிட்டர் வாங்க போகிறீர்கள் என்றால் சற்று கவனமாக பாருங்கள். சிறிய மானிட்டரில் மேல் இடது முனையில் இருந்து, கீழ் வலது முனை வரை உள்ள கோணம் சிறுது என்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் பெரிய மானிட்டரில் இந்த கோணம் அதிகம் என்பதால் சாதாரணமாகவே ஒரு முனைக்கும் மற்றொரு முனைக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும்.
நான் அடிக்கடி சொல்லுவது போல் பார்வைக் கோணம் என்பதுவும் panel சம்பந்தப்பட்டது. நாம் பெரும்பாலும் வாங்கும் குறைந்த விலை மானிட்டர்கள் TN panel வகையை சேர்ந்தவை. இந்த வகை மானிட்டர்கள் மிக குறைந்த பார்வைக் கோணம் உடையவை. கீழே உள்ள படத்தில் TN, VA, IPS Panel-களில் ஒரு படத்தை வெவ்வேறு கோணங்களில் எப்படி தெரிகிறது என்று பாருங்கள்.
Samsung TN Panel
Samsung PVA Panel

NEC IPS Panel


பார்வைக் கோணம் குறைவாக உள்ள மானிட்டரை வங்கி மற்றும் மற்ற ரகசிய இடங்களில் உபயோகப்படுத்தலாம். DTP, photo / video editing செய்பவர்களுக்கு அதிக பார்வைக் கோணம் உள்ள மானிட்டர்களை கொடுங்கள்.
முக்கியமாக எப்பொழுதும் உங்கள் கண்ணால் பார்த்த பின் மானிட்டரை வாங்கவும். Technical Specification-ஐ நம்ப வேண்டாம்.
இன்னும் இருக்கிறது.....



Saturday, June 2, 2012

LCD - பின்னால் உள்ள உண்மைகள் - II



ஒரு மானிட்டர் வாங்கும்போது அதன் technical specification-உள்ள விஷயங்களில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

Native Resolution or Pixel Count.


நல்ல விலை உயர்ந்த மானிட்டர்கள் கூட சில நேரங்களில் சரியான படத்தை காண்பிப்பதில்லை. நாம் இதை மானிட்டர்-இன் கோளாறாக நினைத்து கொள்கிறோம். ஒரு மானிட்டர்-இன் native resolution-உம் அந்த கம்ப்யூட்டர் இன் resolution-உம் (தமிழில் பிரிதிறன்) ஒன்றாக இருந்தால்தான் மானிட்டர்-இன் படமும் துல்லியமாக இருக்கும். பழைய CRT மானிட்டர்-க்கும் புதிய LED மானிட்டர்-க்கும் உள்ள வித்தியாசம் இங்கே தான் இருக்கிறது. CRT மானிட்டர்கள் நீங்கள் எந்த resolution-இல் படத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் அது தன்னை மாற்றிக் கொண்டுவிடும். ஆனால் LCD மானிட்டர்-கள் fixed raster technology-இல் வேலை செய்பவை. இவை நாம் தரும் resolution-க்கு தகுந்தவாறு தம்மை மாற்றிக கொள்ள முடியாது. எனவே இவை வேறு விதமாக செயல்படுகின்றன. நாம் தரும் படத்தை சுருக்கியோ அல்லது பெருக்கியோ படத்தை தருகிறது. எனவே நமக்கு புள்ளி புள்ளியாகவோ அல்லது கலர் கம்மியாகவோ படம் தெரிகிறது. உங்களுக்கு மிக அழகாக துல்லியமாக படம் வேண்டும் என்றால், நம் விண்டோஸ்-இன் resolution-ஐ மானிட்டர் resolution-க்கு ஏற்றவாறு மாற்றிக கொள்ளுங்கள்.
எல்லா படங்களும் 4:3 aspect ratio (தோற்ற விகிதம்) என்ற அடிபடையில் தான் உருவாக்கபடுகின்றன. எனவே தான் நம் மானிட்டர்-களில் resolution எப்போதும் 640 x 480, 800 x 600, 1024 x 768, 1280 x 960, 1600 x 1200 என்று இருக்கிறது. உங்கள் மானிட்டர்-இன் resolution-உம் windows-இன் resolution-உம் ஒன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் வைத்தால் கிடைக்கும் படம் தான் அந்த மானிட்டர்-இன் அதிக பட்ச திறமை. நாம் பெரும்பாலும் செய்யும் தவறு 1280 x 1024என்று resolution-ஐ வைப்பது தான். ஒரு 1024x768 அல்லது 800x600 படத்தை 1280x1024 என்ற resolution-க்கு மானிட்டர் மற்றும் போது படம் சிதறுவது கலர் மாறுவது என்பது நிகழ்கிறது.
ஆனால் இதிலும் சில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. முக்கியமாக படம் 800 x 600 –இல் இருந்து 1024 x 768 மானிட்டர்-க்கு மாற்றும் போது, மானிட்டர் smoothing algorithm என்ற முறையை உபயோகபடுத்துவதால் சில பிரச்சனைகள் வருகிறது. மிக முக்கியான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மானிட்டர்-ஐ 15 pin VGA port-இல் இணைத்திருக்கும் போது தான் மானிட்டர்-கள் இந்த செயலை செய்கின்றது. அதே மானிட்டர்-ஐ நீங்கள் DVI port-இல் இணைத்திருந்தால் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டு இந்த வேலையை ஏற்றுக் கொள்ளும். அப்போது உங்களுக்கு இந்த பிரச்சனை வராது. எனவே முடிந்தவரை DVI port-இல் மானிட்டர்-ஐ இணையுங்கள்.
விண்டோஸ் –ஐ இன்ஸ்டால் செய்யும்போது அது தானாகவே resolution-ஐ மாற்றிக் கொள்ளவா? என்று கேட்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு மானிட்டர்-ம் Extended display identification data (EDID) என்று ஒன்று உள்ளது. இது கம்ப்யூட்டர்-க்கு தன்னுடைய NATIVE RESOLUTION என்ன என்று கூறும். அதற்கு ஏற்றாற்போல் விண்டோஸ் தன் RESOLUTION ஆற்றிக் கொள்ளும். PC READY TV என்று விளம்பரம் பார்த்திருப்பீர்கள். இந்த வகை டீ.வீ,க்கள் EDID உடன் வருபவை. எனவே இவைகளை கம்ப்யூட்டர் உடன் இணைக்கும் போது விண்டோஸ் சொல்லும் resolution-க்கு மாறிக் கொள்வது நல்லது. ஆனால் சில டி.வி. க்கள் இந்த வசதியை கொண்டிருப்பதில்லை. முக்கியமாக 1366 x 768 pixels கொண்ட டி.வி.க்கள் கம்ப்யூட்டர் உடன் இணைக்கும் போது சிறிது பட துல்லியம் குறைகிறது. எனவே மானிட்டர் உடன் வரும் டிரைவரை கண்டிப்பாக இன்ஸ்டால் செய்யுங்கள்.
பெரும்பான்மையான மானிட்டர்கள் கீழ்கண்ட native resolutionஐ கொண்டுள்ளன.
17" (Widescreen): 1280x800 (WXGA)
19" (Widescreen): 1440x900 (WXGA+)
21" (Widescreen): 1600x900 (WSXGA+)
22" (Widescreen): 1920x1080 (WUXGA)
24" (Widescreen): 1920x1080 (WUXGA)
27" (Widescreen): 2560x1440 (WQHD)
30" (Widescreen): 2560x1600 (WQXGA)
இங்கே தான் நம் கம்பெனி-கள் தங்கள் அறிவை காண்பிக்கின்றன. பெரும்பான்மையான மானிட்டர் technical specification-இல் native resolution என்பதே இல்லை. வெறும் resolution  என்று தான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் இது அந்த மானிட்டர்-இன் அதிக பட்ச resolution தானே ஒழிய native resolution கிடையாது. அது எப்போதும் native resolution-ஐ விட அதிகமாகவே  இருக்கும். நாமும் அதை பார்த்து இருப்பதிலேயே மிக அதிக resolution மானிட்டர் இது தான் என்று ஏமாந்து வாங்கி விடுகிறோம்.

SIZE அளவு


மானிட்டர்-இன் அளவு என்பது பழைய CRT மானிட்டர்-களில் இரண்டு விதமாக கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று மானிட்டர் அளவு மற்றொன்று நாம் பார்க்கும் படத்தின் அளவு. ஆனால் LCD மானிட்டர்களை பொருத்தவரை இவை இரண்டும் ஒன்று தான். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பார்க்கும் அளவு என்பது (screen size) அந்த மானிட்டர்-இன் குறுக்கு அளவு (diagonal size) தானே ஒழிய மானிட்டர்-இன் நீளம் அகலம அல்ல. அதனால் தான் 24” மானிட்டர்-கள் செவ்வகமாகவும், சதுரமாகவும் வருகின்றன.

21” முதல் 27” வரை உள்ள மானிட்டர்கள் மிகவும் பொருத்தமானவை. ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் குறைந்த பட்சம் 2 அடி தூரத்தில் இருந்து பார்ப்பது தான் உங்களுக்கு நல்லது. கடைகளிலும், வெறும் கணக்கு வழக்குகளுக்காகவும் 15” மானிட்டர்களே போதுமானது.


BRIGHTNESS வெளிச்சம்.



ஒரு pixel எவ்வளவு வெளிச்சத்தை அதிகபட்சமாக கொடுக்க முடியும் என்பது தான் Brightness என்கிறோம். இதை cd/m2 candelas per square meter என்ற அளவில் கணக்கிடுகிறார்கள். சாதாரண உபயோகத்திற்கான மானிட்டர் 200 முதல் 250 cd/m2 போதுமானது. ஆனால் சினிமா மற்றும் விளையாட்டுக்கு 300 முதல் 400 cd/m2 இருந்தால் நல்லது. இப்போது வரும் எல்லா மானிட்டர்களும் நல்ல வெளிச்சத்தை கொடுக்கின்றன. எனவே இதை பற்றி நாம் கவலை படத் தேவையில்லை. பெரும்பாலும் சற்று வெளிச்சம் குறைவான அறைகளில் குறைவாகவும், வெளிச்சம் அதிகமான இடங்களில் அதிகமாகவும் நாம் மானிட்டர்இல் உள்ள மெனுவைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.

CONTRAST

Contrast என்பது வெள்ளை புள்ளியில் உள்ள அதிகபட்ச வெளிச்சத்திற்கும் கரும்புள்ளியில் உள்ள குறைந்த பட்ச வெளிச்சத்திற்கும் உள்ள வேறுபாடு தான் contrast ratio என்கிறார்கள்.
கம்பனிகளின் ஏமாற்று வேளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. உண்மையில்லேயே இது 1000:1 என்ற விகிதத்துக்கு மேல் எந்த மானிட்டர்ம் இருப்பதில்லை. ஆனால் உங்கள் மானிட்டர்-இன் technical specification-ஐ படித்தால் 10,00,000:1 என்றெல்லாம் இருக்கும். இது சுத்த பொய். கம்பனிகளை கேட்டால் அது Dynamic Contrast Ratio என்று கூறுவார்கள். அது என்ன டைனமிக் கன்றாஸ்ட் ரேஷியோ. முதல் பக்கத்தில் backlit LED என்று பார்த்தோம் அல்லவா?. அந்த LED எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும். உங்கள் மானிட்டர்-இன் பின் பக்க படம் கருப்பாக இருந்தாலும், அது எரிந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் என்னதான் மிக சிறந்த தயாரிப்பாக இருந்தாலும், சிறுது ஒளி அதை ஊடுருவி வரும். ஆனால் full array with local dimming type மானிட்டர்கள் மட்டும், மொத்தமாக பின்னால் உள்ள LED-க்களை குறைத்து விடுவதால் முழு கருப்பாக இருக்கும் (இதைப் பற்றி பின்னால் பார்ப்போம்). உண்மையில் கன்றாஸ்ட் ரேஷியோ என்பது நாம் உபயோகபடுத்தும் போது கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தான். ஆனால் கம்பெனிகள் இதை கணக்கிடும் போது முழுவதுமாக பின்னால் உள்ள LED களுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து விடுகிறார்கள். பின் புலத்தில் ஒளி உமிழ்ப்பான் இல்லாத போது நிச்சயம் கரும்புள்ளிகள், அடர் கருப்பாகத் தான் இருக்கும். இதைதான் அவர்கள் டைனமிக் கன்றாஸ்ட் ரேஷியோ என்று பொய் சொல்கிறார்கள். நாம் உபயோக படுத்தும் போது பின் உள்ள ஒளி உமிழ்ப்பான்கள் எப்போதும் அனைவதில்லை என்பது தான் மிக முக்கியமானது. உதாரணத்திற்கு சாம்சுங் S19A100N என்ற மாடலின் Dynamic Contrast ratio 50,00,000:1 என்றும் static contrast ratio 600:1 என்றும் சொல்லி இருக்கிறார்கள். எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். Static Native என்றும் கூறுவார்கள்.
ஆனால் இதில் நாம் சந்தோஷபட வேண்டியது, நம்மால் மானிட்டர்-இல் முன் பக்கமுள்ள மெனுவைக் கொண்டு contrast ஐ மாற்றிக்கொள்ள முடியும் என்பது தான். Brightness மற்றும் contrast-ஐ மாற்றி அமைத்து முடிந்தவரை contrast ratio வை அமைத்துக் கொள்ளலாம்.
பக்கத்தில் உள்ள படத்தில் முதலில் உள்ளது contrast brightness மாற்றி அமைத்துக் கொண்டது. இரண்டாவதாக உள்ளது மாற்றி அமைத்துக் கொள்ளாதது. இரண்டாவது படத்தில் உள்ள மேக கூட்டத்தை பாருங்கள். படம் எவ்வளவு மோசம என்பது தெரியும்.


பக்கத்தில் உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 1000:1 native contrast ratio மற்றும் 10000:1 Dynamic contrast ratio உள்ள இரு மானிட்டர்களின் படங்கள். Native உள்ள மானிட்டர்-இல் வெள்ளை நிறம் எவ்வளவு பளிச் என்றும், Dynamic அது gray ஆகவும் இருப்பதை கவனியுங்கள்.
மானிட்டர்கள் native or static contrast ratio 700:1 முதல் 1000:1 வரை இருப்பது நல்லது.


ஆனால் இதை எல்லாம் மீறி panel என்று ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி கம்பெனிகள் மூச்சு விடுவதில்லை. ஆனால் இந்த பேனல்கள் தான் ஒட்டு மொத்த  மானிடரின் தரத்தையே நிர்ணயிக்கிறது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

 




 

XP installation errors

அன்புள்ள காண்பித் நண்பர்களுக்கு,

சமீபத்தில் க்ளரியன் இதழுக்காக வந்த கேள்விகளில் முதன்மையானது System format செய்யும்போது சில நேரங்களில் Blue Dump வருகிறதே அது எதனால் ? எந்த பாகத்தை மாற்றவேண்டும் (RAM or Harddisk or ....). பொதுவாக XP இன்ஸ்டால் செய்யும்போது எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இதைப் பற்றி உங்களுக்கு நிறையவே தெரிந்திருக்கும். இருந்தாலும் தெரியாத நண்பர்களுக்காக இந்த தகவல்கள்.

      நான் கீழே கொடுத்துள்ள விவரங்கள் யாவும clean XP installation (புதிய)-க்கு மட்டுமே பொருந்தும். அப்கிரேட்-க்கும் ரீஇன்ஸ்டால்க்கும் சில விஷயங்கள் பொருந்தாது.

1.     Cannot boot from CD-ROM drive இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பயாஸ் -இல் சென்று பூட் ஆப்ஷனில் first பூட் டிவைசை உங்கள் சி டி டிரைவாக மாற்றிக்கொள்ளுங்கள். சில சி டி டிரைவ்கள் மிகவும் தாமதமாக பூட் ஆகும். அதற்குள் பயாஸ் அடுத்த பூட் டிரைவ்-க்கு சென்று விடும். இதை தடுக்க சி டி டிரைவ் தவிர மற்ற எல்லா பூட் ஆப்ஷன்-களையும் டிசேபல் செய்துவிடவும். சில இன்டெல் மதர்போர்ட்கள் உங்கள் சி டி ராம் slave ஆக இருந்தால் பூட் ஆகாது.

2.     Cannot copy file xxx.xx from CD-ROM Drive - CD-ROM drive  களால் தான் பெரும்பான்மையான பிரச்சனைகள் வருகிறது. நாங்கள் எந்த சி டி ட்ரிவ்யும் நம்புவதில்லை. எந்த கம்ப்யூட்டர் வந்தாலும் முதலில் அவர்களின் டிரைவ்-ஐ கழற்றி விட்டு எங்களின் புது டிரைவ்-ஐ மாட்டி விடுவோம். P4 க்கு பின் வந்த கணினிகளில் USB boot option இருந்தால் ஒரு எக்ஸ்டெர்னல் டிரைவ்-ஐ சொருகி அதில்தான் இன்ஸ்டால் செய்வோம். (குறிப்பு : 2000 / 2001 இல் தயாரிக்கப்பட்ட சாம்சுங் டிரைவ்-களில் ஒரு சிறிய தயாரிப்பு தவறு இருப்பதால் அதனை உபயோகபடுத்த வேண்டாம். அதை firmware அப்டேட் செய்தால் தான் இன்ஸ்டால் செய்ய உபயோகபடுத்த முடியும்).  சி டி மீடியா கூட தவறாக இருக்கலாம். இன்ஸ்டால் செய்யும்போது பைல் காபி தவறு வந்தால் டிரைவ் மற்றும் மீடியா வை மாற்றுங்கள். மிக முக்கியமாக உங்கள் பயாஸ்-இல் SATA RAID or UDMA enabled –என இருந்தால் அதை முதலில் disable செய்யுங்கள்.

3.     Errors before starting windows சி டி ராம் டிரைவ் அல்லது மீடியா. சில சமயங்களில் ராம் கூட தவறாய் இருக்கலாம். Error code STOP 0x0000008E, STOP0x00000050 PAGE FAULT IN NON PAGED AREA, Setup cannot copy file setupdd.sys, 0x00000004 போன்றவை வந்தால் உங்கள் ராம் தான் தவறு.

Setup is inspecting your Hardware Configuration”  என்று வரும்போது கணனி hang ஆனால் (blank screen) உங்கள் ஹார்ட் டிரைவ்-இன் பூட் ஏரியா-இல் தவறு இருக்கிறது என்று பொருள். இந்த ஹார்ட் டிரைவ்-இல் முன்பே linux grub லோட் செய்திருந்தாலோ, பயஸ்-இல் Boot sector virus protection-ஐ enable செய்திருந்தாலோ, boot sector-இல் வைரஸ் இருந்தாலோ இந்த பிரச்சினை வரும். இதற்கு third party low level format செய்வது சிறந்தது. (உங்களுக்கு  சிறிது கணனி அடிப்படை தெரிந்திருந்தால் 1st sector format போதுமானது).

ராம் –ஐ தூக்கி போடுவதற்கு முன், பயாஸ்-இல் உள்ள ராம் frequency-ஐ சிறிது குறைத்து பாருங்கள் அல்லது வேறொரு ராம் ச்லாடில் பொருத்தி பாருங்கள். பெரும்பாலான நேரங்களில் ராம் அதன் ஸ்லாட்-இல் சரியாக உட்கார்ந்து இருக்காததே தவறாக இருக்கும். ராம்-ஐ கழற்றி அதன் பின்-களை நம் குழந்தைகள் உபயோகப் படுத்தும் ரப்பர் கொண்டு தேய்த்து பின் துடைத்து போடுங்கள் சரியாகி விடும். அப்படியும் சரியாக விட்டால் அதை மேஜை மேல் வைத்து அதன் ஐ சி களை நன்றாக அழுத்துங்கள். Hot air gun வைத்திருந்தால் அதை வைத்து சிறிது சூடு காண்பியுங்கள். (hot air gun mobile service centre வைத்திருப்பவர்களிடம் இருக்கும்).

இந்த setupdd.sys ப்ராப்ளம் மிக பெரிய தொந்தரவு. நீங்கள் ராம்-ஐ மாற்றிய பிறகும் error code 7 or 4 வந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் மற்றும் சி டி டிரைவ் இரண்டும் ஒரே மோடில் (master / slave) இல் இருக்கிறதா என செக் செய்யவும்.

இவை எல்லாம் செய்தும் இன்னும் எரர் வருகிறதா? பயஸ் சென்று internal மற்றும்  external cache-disable  செய்யவும். உங்கள் processor dual core quad core என்று இருந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு core-களை மட்டும் disable  செய்யவும்.

ராம் டெஸ்ட் செய்திட இந்த ப்ரோக்ராம்-ஐ பதிவிறக்கம் செய்யவும். http://www.memtest86.com/

4.     Hard disk drive not found - புதிய கணனி என்றால் பயாஸ் உள் சென்று ஹர்ட் டிரைவ் கண்ட்ரோல் option சென்று ஐ டி இ (IDE) மோடை தேர்ந்தெடுக்கவும். அப்பொழுதும் சரி ஆகவில்லை என்றாலோ அல்லது உங்கள் பயாஸ்-இல் மோட் மாற்றும் முறை இல்லை என்றாலோ நீங்கள் உங்கள் மதர் போர்டு-க்கான sata controller driver-ஐ டவுன்லோட் செய்து எக்ஸ்டெர்னல் USB floppy drive உதவியுடன் தான் XP ஐ நிறுவ முடியும். (f6 option மற்றும் slipstreaming பற்றி தனியே எழுதுகிறேன்).

5.     ஹார்ட் டிஸ்க் டிரைவ்-ஐ கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பாதி கிணறு தாண்டியாயிற்று என்று பொருள். இப்போது செட்டப் உங்கள் ஹார்ட் டிரைவ்-இல் முன்பே உள்ள பார்டீஷியன்களை காட்டும். இந்த ஸ்க்ரீனில் ஒரு எரர் வர வாய்ப்புண்டு. Windows cannot recongnise the partition you selected என்று வரலாம். உங்கள் ஹார்ட் டிரைவ்-இன் பர்ட்டிஷியன்-இல் தவறு ஏதாவது இருந்தால் எல்லா பர்டிஷியன்-களையும் அழித்து விட்டு புதிதாக உருவாக்கிக் கொள்ளவும்.
******** பார்டிஷியன் புதிதாக உருவாக்கும்போது NTFS-இல் உருவக்கிக்கொள்ளுங்கள். FAT32 வேண்டாம். ஆனால் கடைசி பார்டிஷியன் மட்டும் fat32-ஆக வைத்துக்கொள்வது நல்லது. உங்களுடைய முக்கியமான பைல்களை இதில் வைத்துக்கொள்ளுங்கள். விண்டோஸ் பூட் பிரச்சனை வந்தால் win98 / XP பூட் சிடி வைத்து இந்த பர்டிஷியன்இல் உள்ள பைல்களை எடுப்பதற்கு வசதியாக இருக்கும். ஆனால் FAT 32 –வின் அதிகபட்ச பார்டிஷியன் அளவு 32GB தான்.

6.     பார்டிஷியன்-ஐ பார்மட் செய்யும் போது எப்பொழுதுமே புல் பார்மட் செய்யவும். குய்க் பார்மட் செய்தால் பைல் காபி ஆகும்போது காபி எர்ரர் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. பைல் காபி ஆகும்போது எரர் வந்தால் cdrom drive, media, hard disk –இல் தவறு உள்ளது என்று அர்த்தம்.

7.     ஹார்ட் டிஸ்க்-ஐ பார்மட் செய்யும்போது Setup has performed maintenance on your hard disk. You must restart your computer to continue with Setup என்றோ Setup is unable to perform the requested operation on the selected partition. This partition contains temporary Setup files that are required to complete the installation என்றோ காபி செய்யும்போது கம்ப்யூட்டர் நின்று நின்று வேலை செய்தாலோ அல்லது An error has been encountered that prevents setup from continuing. One of the components that windows needs to continue setup could not be installed. Data error "cyclic redundancy check" என்று எர்ரர் வந்தாலோ உங்கள் ஹார்ட் டிரைவ் தான் தப்பு. அதை லோ லெவல் பார்மட் செய்யுங்கள். லோ லெவல் பார்மட் செய்யும் மென்பொருட்கள் இன்டர்நெட்டில் நிறைய கிடைக்கும். http://hddguru.com/software/HDD-LLF-Low-Level-Format-Tool/HDDLLF.4.25.exe. உங்களுடைய ஹார்ட் டிரைவ் எந்த கம்பெனியோ அந்த கம்பெனி வெப்சைட்டில் லோ லெவல் பார்மட் மென் பொருள் கொடுத்திருப்பார்கள். லோ லெவல் பார்மட் செய்தும் எரர் வருகிறது என்றால் HDD Regenerator, Spinrite, hard drive mechanic போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி முடிந்தவரை ஹார்ட் டிரைவ்-ஐ தேற்றலாம்.

லோ லெவல் பார்மட் செய்யும்போது உங்களின் முதல் பார்டிஷியன்-இல் நிறைய செக்டர்களில் bad என்று காண்பித்தால் விண்டோஸ் பதிவு செய்வதற்கு D போன்ற மற்ற பார்டிஷியன்-ஐ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

CRC error (cyclic redundancy check) எரர் வந்தால் setup-இல் இருந்து வெளியே வந்து கம்ப்யூட்டர்-ஐ ரீபூட் செய்து திரும்பவும் செட்அப்பை செய்யுங்கள். Recovery console-இல் (பார்க்கவும் recovery console செல்வது எப்படி). C:\-இல் chkdsk /r என்று டைப் செய்யவும். இது முடிந்தவுடன் எரர் லிஸ்ட்டை பார்க்கவும். எதாவது எரர் தெரிந்தால் chkdsk /f  என்று டைப் செய்து என்டர் செய்யவும். இது முடிந்தபின் கணனியை ரீபூட் செய்து மறுபடியும் செட்அப் செய்யவும்.
********* இன்டெல் i815 மதர்போர்டுடன் USB கீபோர்ட் மற்றும் மௌஸ் இணைத்திருந்தால் செட்அப் செய்யும்போது அடிக்கடி hang ஆகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்க்கு பயஸ்இல் உள்ள legasy USB support option-ஐ disable செய்யவும். அல்லது PS/2 கீபோர்டு / மௌஸ் உபயோகபடுத்தவும்.

8.     பைல் காபி செய்யும்போது காபி எரர் வந்தால் உங்கள் cdrom drive அல்லது media தவறாக இருக்கலாம். சில நேரங்களில் பயஸ்-இல் உள்ள ATA/100/133 setting கூட தவறாக இருக்கலாம். நான் முன்பே சொன்ன மாதிரி RAM frequency mismatch, overclocking கூட காரணமாக இருக்கலாம். மேலே சொன்ன ram test செய்யவும். இதை தவிர மேலே சொன்ன UDMA, third party boot manager, virus போன்றவையும் காரணங்களாக இருக்கலாம். முக்கியமாக நீங்கள் ரீஇன்ஸ்டால் செய்யும்போது நிறைய பைல்கள் இல்லை என்று எரர் வரலாம். அவை உங்களின் பழைய டிரைவர் பைல்கள். இவற்றை நீங்கள் ESC தட்டி சென்று விடலாம். தவறில்லை.

9.     எல்லா காபியும் முடிந்தபின்னால் கம்ப்யூட்டர் தானாகவே ரீஸ்டார்ட் ஆகும். ரீஸ்டார்ட் ஆன பின்னால் மறுபடியும் சி டிஇல் பூட் ஆகும்போது எந்த கீயையும் அழுத்தாதீர்கள். தானாகவே செட்அப் தொடரும். இப்போது தான் மாபெரும் பிரச்சனைகள் ஆரம்பிக்க போகிறது.

ஏனென்றால் இதுவரை XP டெக்ஸ்ட் மோடில் வேலை செய்து வந்தது. இப்பொழுதுதான் GUI Graphics  மோடிர்க்கு வருகிறது. பைல் காபி செய்யும்போது உங்களின் முழு மெமரியையும் அது உபயோகபடுததுவதில்லை. நீங்கள் அதிக அளவு மெமரி வைத்திருந்தால் அதில் சிறிது அளவு தான் பயன்படுத்தி இருக்கும். இப்பொழுது முழு மெமரியையும் பயன்படுத்தும்போது மெமரி எரர் வரும். கீழ்கண்ட எரர் அன்றி வேறு எதாவது எரர் வந்தால் அதற்க்கு முழு பொறுப்பு மெமரி தான்.

Recovery Console செல்வது எப்படி - கணணிஐ சி டிஇல் பூட் செய்யவும். முதல் செட்அப் மெனுவில் enter to continue or press R for recovery console என்று வரும்போது “R”  கீயை அழுத்தவும். Windows login-இல் 1 ஐ தேர்வு செய்து பாஸ்வோர்ட்க்கு என்டர் செய்யவும். C:\> என்று கமாண்ட் ப்ரோம்ப்ட் வரும்.

எடுத்தவுடன் NTLDR missing  என்று வந்தால் recovery console சென்று C prompt-இல் COPY E:\I386\NTLDR C:\ மற்றும் COPY E:\I386\NTDETECT.COM C:\ என்று டைப் செய்து என்டர் செய்யவும். பின் ரீபூட் செய்து செட்அப்பை தொடரவும். இப்பொழுதும் அதே தவறு வந்தால் recovery console சென்று bootcfg / rebuild என்று டைப் செய்யவும். “Add installation to boot list? (Yes/No/All)”  என்று கேட்கும் போது “Y” அழுத்தவும். “Enter Load Identifier” –இல் “Windows XP” என்று டைப் செய்யவும். “Enter OS Loader Option”-இல் “/fastdetect” என்று டைப் செய்யவும். இப்பொழுது ரீபூட் செய்யவும். திரும்பவும் அதே எரர் வந்தால் recovery console (C:\) வந்து fixboot  என்று டைப் செய்து என்டர் செய்யவும். மீண்டும் fixmbr என்று டைப் செய்து என்டர் செய்யவும். இதன் பின்னரும் NTLDR missing வந்தால் உங்கள் ஹார்ட் டிரைவ்-இன் கேபிள்களை செக் செய்யவும். அதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் லோ லெவல் பார்மட் செய்ய வேண்டியதுதான்.

HAL.DLL is missing – HAL.DLL (Hardware Abstraction Layer) மேலே சொன்னபடி recovery console சென்று bootcfg, fixboot, fixmbr method-try செய்யவும். Recovery console-இல் expand d:\i386\hal.dl_ c:\windows\system32 என்று டைப் செய்து என்டர் செய்யவும்.

NTOSKRNL.EXE missing – Recovery console சென்று உங்கள் ப்ராசெசெர் uniprocessor (P4)ஆக இருந்தால் expand d:\i386\ntoskrnl.ex_ c:\windows\system32\ntoskrnl.exe என்றும் multiprocessor ஆக இருந்தால் expand d:\i386\ntkrnlmp.ex_ c:\windows\system32\ntoskrnl.exe என்றும் டைப் செய்யவும்.

Stop 0x000000ED Unmountable Boot Volume – உங்கள் பயஸ்-இல் UDMA enable செய்துள்ளீர்கள், ஆனால் 40 wire IDE cable உபயோகபடுத்தி உள்ளீர்கள். பயஸ்-இல் UDMA-வை disable செய்யவும் அல்லது 80 wire 40 pin IDE cable-ஐ உபயோகபடுத்தவும்.

Setup cannot set the required windows XP configuration information. This indicates an internal setup error . Contact your system administrator. உங்கள் கணனியில் உள்ள PCI card ஏதாவது இருந்தால் அதை நீக்கி விடவும். அதுவும் சரியில்லை என்றால் உங்கள் பயஸ்-இல் உள்ள serial, parallel, audio, Ethernet, wi-fi போர்ட்களை disable செய்து விடவும்.

இனி ஒவ்வொரு எரர்-ம் எதனால் வருகிறது என பார்போம்.

STOP 0x0000000A or IRQL_NOT_LESS_OR_EQUAL
எதோ ஒரு டிரைவர் தடை செய்யப்பட்ட மெமரி ஏரியாவிற்குள் நுழைய முயல்கிறது. மேலே சொன்ன மாதிரி serial, parallel, PCI add-on cards, Ethernet, sound, cache, cores of a processor, shadow, L1, L2, video cache, boot sector virus protection, plug & Play OS installed,  –களில் ஒவ்வொன்றாக disable செய்து பார்க்கவும். அப்பொழுதும் எரர் வருகிறதா? இரண்டு சி டி டிரைவ்-கள் இரண்டு ஹார்ட் டிரைவ்-கள் இருந்தால் ஒன்றை கழற்றி விடவும். அப்படியும் சரியாகவில்லை என்றால் HAL F5 கீ ஆப்ஷன் தான் ஒரே வழி. இதை பற்றி பின்னர் சொல்கிறேன். பொதுவாக இந்த எரர் உடன் வரும் ரிப்போர்ட்-இல் எந்த பைல் / டிரைவர் தவறு என்று சுட்டி காட்டப்பட்டிருக்கும். அதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.

STOP 0x0000001E or KMODE_EXCEPTION_NOT_HANDLED
முழுக்க முழுக்க டிரைவர் தவறு தான்.  0A பகுதியில் உள்ளதை கடைபிடிக்கவும்.
STOP 0x00000024 or NTFS_FILE_SYSTEM

ஹார்ட் டிரைவ் தவறு. மேலே சொன்ன recovery console chkdsk /r option-ஐ பயன்படுத்தவும். உங்கள் பார்டிஷியன் FAT32 –ஆக இருந்தால் 0x00000023 என்று வரும்.

STOP 0x0000002E or DATA_BUS_ERROR
ராம் தான் தவறு. ஆனால் ஹார்ட் டிஸ்க் டிரைவ், மதர் போர்டு, வீடியோ கார்டு தனியாக இருந்தால் அதில் உள்ள வீடியோ ராம் கூட காரணமாக இருக்கலாம்.

STOP 0x0000003B or SYSTEM_SERVICE_EXCEPTION
OA மாதிரியே டிரைவர் தவறு.

STOP 0x0000003F or NO_MORE_SYSTEM_PTES
டிரைவர்
STOP 0x00000050 or PAGE_FAULT_IN_NONPAGED_AREA
டிரைவர், ஆண்டி வைரஸ் ப்ரோக்ராம், ராம்

STOP 0x00000074 or BAD_SYSTEM_CONFIG_INFO
சத்தியமாக ராம் தாங்க. சில சமயங்களில் உங்கள் registry corrupt ஆனால் கூட இது வரும். மிக அரிதாக வீடியோ ராம்கலாலும் இது வரலாம்.

STOP 0x00000077 or KERNEL_STACK_INPAGE_ERROR

மெமரி ராம், ஹார்ட் டிரைவ், டிஸ்க் கண்ட்ரோல் ஏரியா, வைரஸ்.

STOP 0x00000079 or MISMATCHED_HAL
ACPI bios problem. Disable ACPI in bios. 079க்கு பின் ௦01 அல்லது 02 வந்தால் ntoskrnl.exe 03 வந்தால் ntldr missing problem.

STOP 0x0000007A or KERNEL_DATA_INPAGE_ERROR

0x0000007A க்கு பின் நான்கு நெம்பெர்கள் வரும். அதில் இரண்டாவது மிகவும் முக்கியமானது. அது
0xC000009A  -RAM or Hard disk drive virtual memory is not enough.
0xC000009C – ஹார்ட் டிரைவ் bad sector problem.
0xC000009D – Hard drive cable loose or hard drive controller problem.
0xC000016A – Hard drive bad sector.
0xC0000185 – நீங்கள் இரண்டு ஹார்ட் டிரைவ்கள் அல்லது இரண்டு சீடி டிரைவ்கள் இணைத்துள்ளீர்கள் அல்லது உங்கள் கேபிள் இணைப்போ ஹார்ட் டிரைவ் ஜம்பர் சரிஇல்லை.
இதை தவிர வைரஸ், ராம், ஓவர்ஹீட், மதர்போர்டு கபாசிடர் போன்றவையும்.

STOP 0x0000007B or INACCESSIBLE_BOOT_DEVICE
recovery console – bootcfg.மேலே சொல்லியுள்ளதை பார்க்கவும்.

STOP 0x0000007F or UNEXPECTED_KERNEL_MODE_TRAP
RAM, RAM mismatches, overclocked RAM speed, Overclocked CPU frequency, failure of CPU fan, Power supply section overheat, capacitor in motherboard aged.


STOP 0x0000008E (0x00000005,0xBF869F22,0xF9470688,0x00000000)
·         The Catroot2 folder is not correctly deleted during the installation.
·         The random access memory (RAM) configuration is not compatible with Windows XP.
·         One or more of the RAM modules on your computer do not work correctly.

STOP 0x000000D1 or DRIVER_IRQL_NOT_LESS_OR_EQUAL
இது மிகவும் சாதாரணமாய் வரும் எரர். இதன் அடிப்படை ஏதோ ஒரு டிரைவர் சரியில்லை. அவ்வளுவுதான்.

இதை தவிர இன்னும் பல எரர்கள் உள்ளன. அவை எல்லாம் அவ்வளவாக நமக்கு வராதவை. மிக முக்கியமான ஒரு விஷயம். நான் மேலே கூறிய அனைத்துமே புதிய XP –கானது மட்டுமே. முன்பே உள்ளதை ரீஇன்ஸ்டால் செய்தாலோ இரண்டாவதாய் இன்ஸ்டால் செய்தாலோ இன்னும் நிறைய எரர்கள் வரும்.

வேறு எதாவது பிரட்ச்னைகளை நீங்கள் எதிர்கொண்டால் அதை தயவு செய்து எனக்கு அனுப்புங்கள்.

Adimurugan.V
A.V.M. Computers
1, Tirukoilur Road Lane
Opp : Meenakhsi Theatre
Tiruvannamalai – 606601.
Ph. : 04175-225754
Mob. : 0995 2222 520