Saturday, November 3, 2012

பிரம்மாவிடம் சரணடைந்த பைரேட் பே

 The Pirate Bay  இந்த பெயர் டோர்ரென்ட் உபயோகபடுத்தும் அனைவரும் தெரிந்திருக்கக் கூடிய ஒரு வெப்சைட். உலகிலேயே மிக உன்னதமான resilient பிட் டோர்ரென்ட் சைட் என்ற பெருமையைக் கொண்டது. அது என்ன resilient. Resilient என்றால் ஒரு பொருளை நீங்கள் அழுத்தி, வளைத்து, இழுத்து இப்படி என்ன செய்தாலும் திரும்பவும் தன் பழைய நிலைக்கே திரும்பிவிடும் பொருளுக்கு resilient என்றுக் கூறுவார்கள். எத்தனை முறை எரித்தாலும் திரும்பவும் உயிர்த்தெழும் போனிக்ஸ் பறவையைப் போல. இதன் வரலாற்றை படித்தால் இந்த பட்டம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியும்.
 
Hans Fredrik Neij (TiAMO)
  
Per Gottfrid Svartholm Warg
(Anakata)
கி.பி. 2003 நவம்பர்-இல் ஸ்வீடனில் ஆரம்பிக்கப்பட்டது இந்த வெப்சைட்.  Piratbyrån என்ற அமைப்பினர் இதை ஆரம்பித்தனர். Gottfrid Svartholm மற்றும் Fredrik Neij (இவர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். பழைய pirated software-இல் anakata, TiAMO என்ற பெயர்களில் இருப்பார்கள்) இதை நடத்தினார்கள்.

  ஸ்பானிஷ் மொழியில் ஒரு file sharing server இல்லை என்ற குறையை போக்கவே தனது லேப்டாப்பை ஒரு சர்வராக மாற்றி புதிதாக ஒரு tracker software (hypercube) எழுதி The Pirate Bay சர்வரை உருவாக்கினார்கள். சிறிது காலம் கழித்து, அந்த வெப்சைட் ஸ்வீடன் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்து உபயோகபடுத்தபடுவதை (80%) அறிந்து, July 2005 முதல் மற்ற மொழிகளுக்கும் பொதுவாக மாற்றினார்கள்.

முதல் சர்வர் - Tiamo-வின் லேப்டாப்
Celeron 1.3 MHz with 256MB  RAM

31 May 2006-இல் Motion Picture Association of America இவர்கள் மேல் குற்றம் சாட்டியதை தொடர்ந்து Stockholm-இல் இருந்த சர்வர்-ஐ ஸ்வீடன் போலீசார் வாரி சுருட்டிக் கொண்டுப் போய் விட்டார்கள். ஆனால் மூன்றே நாட்களில் மீண்டும் முளைத்து விட்டது Pirate Bay.  ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது Pirate Bay. ஆனால் சர்ச் என்ஜின் மட்டும் வேலை செய்யவில்லை. ஜூன் 9-ஆம் தேதி முழு வேகத்துடனும், முன்பை விட அதிக வேகத்துடன் வேலை செய்த்தது Pirate Bay. ஆரம்பத்தில் நான்கு லினக்ஸ் சர்வர்களும், ஒரு வெப் சர்வரும் கொண்டு நெதர்லாந்து நாட்டிலிருந்து இயங்கியது. ஆனால் ஹாக்கர்கள் ஸ்வீடன் போலீசை விடவில்லை. ஜூன் 1,2,3 தேதிகளில் ஸ்வீடன் போலீசின் வெப்சைட் இயங்கமுடியவில்லை. இது போன்று மேலும் பல ரைடுகள் பிற்காலத்தில் வரலாம் என்று கணித்த Pirate Bay நிர்வாகிகள், பெல்ஜியம் மற்றும் ரஷ்ய நாடுகளில் ஒரு காபி சர்வர்களை வைத்தார்கள்.
மே 2007 ஹாக்கர்ஸ் Pirate Bay-வை தாக்கினார்கள். ஆனால் இரண்டு மணி நேரத்தில் அது மீண்டு வந்தது.
27 ஏப்ரல் 2009 சர்வர் சப்ளை செய்த கேபிள்கள் நாசம் செய்யப்பட்டன. IPv4 கேபிள்கள் மட்டுமே நாசம் செய்யப்பட்டதால் IPv6 கேபிள்கள் மூலம் தடை இல்லாமல் இயக்கப்பட்டது.
24 ஆகஸ்ட் 2009 Pirate Bay ஹோஸ்ட் செய்த ISP திடீரென சைட் இட மாற்றம் செய்ய சொல்லி சைட்-ஐ மூடி விட்டார். மூன்றே மணி நேரத்தில் வேறொரு ISP இடமிருந்து Pirate Bay முளைத்தது.
6 அக்டோபர் 2009 Pirate Bay IP பிளாக் செய்யப்பட்டது. உடனே அது CyberBunker என்ற சர்வர் IP இல் இயங்கத் தொடங்கியது. Cyber Bunker IP routing தான் செய்ததே தவிர பைல் எதுவும் வைத்திருக்கவில்லை. உண்மையான சர்வர் எங்கு உள்ளது என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியவில்லை.
17 மே 2010 Cyber Bunker-க்கு IP Routing-ஐ நிறுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஸ்வீடன எதிர்க் கட்சியான Piratpartiet (The Pirate Party) (இது Pirate Bay-இன் அரசியல் கட்சி, பல லட்சம் இளைஞ்ர்களை கொண்டுள்ளது. ஐரோப்பிய பார்லிமென்ட்-க்கு இரண்டு உறுப்பினர்களை அனுப்பியுள்ளது. ஸ்வீடனின் மூன்றாவது பெரிய கட்சி இது) செர்வரில் இருந்து வரத் துவங்கியது.
8 ஜூலை 2010 அர்ஜென்டினாவை சேர்ந்த ஹேகர்ஸ் சர்வர்-ஐ ஹாக் செய்தார்கள்.
16 மே 2012  மிகப் பெரிய DDoS அட்டாக் நடத்தப்பட்டு 24 மணி நேரம் சர்வர் முடக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20௦ முறைகள் Pirate Bay சர்வர்-ஐ முடக்கி இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஓரிரு நாட்களிலேயே மீண்டும் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாவது Pirate Bay முளைத்து விடுகிறது.
சென்ற மார்ச் 1 அன்று Pirate Bay வெளியிட்ட ஒரு அறிக்கை அனைவரையும் ஆச்சர்யபட வைத்தது. ஒரு நாட்டின் நிலபரப்பில் சர்வர் வைத்தால் தானே அந்த நாட்டின் சட்டப்படி தவறு என்கிறீர்கள். நாங்கள் வானத்தில் ஐந்து கிலோமீட்டர் உயரத்தில் மிதக்கும் சர்வர்களை வைக்க போகிறோம். அவைகள் சர்வ தேச கடல் பகுதிகளில் பறக்கும். அப்போது எந்த நாட்டின் சட்டமும் எங்களை முடக்க முடியாது என்று அறிவித்தார்கள்.
உலகின் பல நாடுகள் Pirate Bay-வை தடை செய்திருக்கின்றன. ஆனால் அத்தனை தடைகளையும் எப்படியோ உடைத்து Pirate Bay வந்து விடுகிறது.
இந்தியாவில் 4 மே 2012 இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் Pirate Bay-ஐ தடை செய்ய சொன்னது. YouBroadband மற்றும் Hathway தவிர மற்றவர்கள் தடை செய்தார்கள். 22 ஜூன் 2012 அன்று சென்னை ஹைகோர்ட் எந்தெந்த பக்கங்கள் பைரசி மென்பொருளைக் கொண்டுள்ளதோ அந்த பக்கங்களை மட்டும் தான் தடை செய்ய வேண்டும், ஒட்டுமொத்தமாக முழு சைட்யும் தடை செய்யக் கூடாது என்று தீர்பளித்தது.
கடந்த செப்டம்பர் மாதம் Pirate Bay சர்வர்களுக்கு சென்ற மின்சாரம் தடை செய்யப்பட்டதால் ஐந்து மணி நேரம் அவை வேலை செய்யவில்லை. அப்பொழுது தான் அவர்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று யோசித்தார்கள். இப்பொழுது மிகவும் பிரபலமாய் உள்ள cloud-ஐ வைத்து ஏன் சர்வர்களை இயக்கக் கூடாது என்று நினைத்தார்கள்.
உலகம் முழுவதுமுள்ள cloud சேவை அளிப்பவர்களிடம் கணக்கு (மற்றவர்களின் பெயர்களில்) ஆரம்பிக்கப்பட்டது. The Pirate Bay, load balancer  மற்றும் transit-router களை மட்டுமே தன்னிடம் வைத்துள்ளது. அதையும் ஒரே நாட்டில் வைக்காமல் உலகில் உள்ள ஐந்து கண்டங்களிலும் வைத்துள்ளது. நம்முடைய (user) கோரிக்கைகள் எல்லாம் load balancer-இடம் போகும். Load Balancer ஒரு டிஸ்க் இல்லாத சர்வர் (diskless server). அனைத்து விஷயங்களும் RAM-இல் தான் இருக்கும். Load balancer-இல் இருந்து transit router வழியாக cloud –இல் உள்ள virtual server-க்கு செல்லும் எல்லா டாடாக்களும் (data), encrypt செய்யப்பட்டிருப்பதால், யாரும் கண்டுப் பிடிக்க முடியாது. Cloud provider-க்கே நாம் The Pirate Bay சர்வர்-ஐ வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்றுத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், டாடா பரிமாற்றங்களை பார்க்க முடியாது.
சரி. The pirate Bay-ஐ போலீஸ் ரைடு செய்தால் என்ன கிடைக்கும். வெறும் transit router மட்டுமே கிடைக்கும். சர்வர்கள் எதுவுமே இருக்காது. அதைப் பிடித்துக்கொண்டே அடுத்த நாட்டிற்கு சென்றால் அங்கு ஒரு load balancer இருக்கும். அதிலும் டிஸ்க் எதுவும் கிடையாது. அது ஒரு diskless server. எப்படியோ cloud server-ஐ கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு வெறும் 500GB encrypted டிஸ்க் இமேஜ் மட்டுமே கிடைக்கும். ஒரு cloud அளிப்பவர் நிறுத்தினாலும் கவலை இல்லை. வேறொரு கண்டத்தில், வேறொரு நாட்டில் உள்ள cloud virtual server வாங்கி அதில் VM disk image-களை நிறுவி load balancer-க்கு இணைத்தால் முடிந்தது. இதை எல்லாம் செய்ய மொத்தம் மூன்று நிமிடங்கள் போதும். உபயோகிப்பாளர்களுக்கு மாற்றம் எதுவும் தெரியாது. தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் load balancer-உடன் virtual cloud server தொடர்பின்றி இருந்தால் அவை தானாகவே அணைந்து விடும்.
அது என்ன பிரம்மா. அட cloud-ஐ இப்போது The Pirate Bay இப்படி தான் சொல்கிறார்கள். The Pirate Bay-இன் அதிகாரபூர்வ அறிக்கையை பாருங்கள்.
The cloud, or Brahman as the hindus call it, is the All, surrounding everything. It is everywhere; immaterial, yet very real.
If there is data, there is The Pirate Bay.
Our data flows around in thousands of clouds, in deeply encrypted forms, ready to be used when necessary. Earth bound nodes that transform the data are as deeply encrypted and reboot into a deadlock if not used for 8 hours.
All attempts to attack The Pirate Bay from now on is an attack on everything and nothing. The site that you're at will still be here, for as long as we want it to. Only in a higher form of being. A reality to us. A ghost to those who wish to harm us.
Adapt or be forever forgotten beneath the veils of maya.
பிரம்மம் என்றால், எங்கும் நிறைந்திருப்பவன், எங்கும், எதிலும், நீக்கமற, கண்ணுக்குத்தெரியாத ஆனால் உண்மையில் உள்ளவன் என்று பொருள். The Pirate Bay-யும் இப்போது அப்படித்தான். உலகின் எல்லா இடங்களிலும், கண்ணுக்குத்தெரியாமல் நிறைந்திருக்கிறது. இதை தடுக்க நினைத்தால் உலகில் அனைத்தையும் தடுக்க வேண்டும் அல்லது எதையுமே தடுக்க கூடாது. எல்லாம் மாயா.
எவ்வளவு தான் தடை செய்தாலும், திரும்ப திரும்ப முளைக்கும் இந்த போனிக்ஸ் வெப் சைட்-ஐ எப்படி தடை செய்வது என்று ஸ்வீடன், அமெரிக்க போலீஸ் தலையை பிய்த்து கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு சோதனைகளும் தான் எங்களுக்கு பல சாதனைகளை செய்ய தூண்டியது என்று போலீஸ்-க்கு நன்றி சொல்லியுள்ளனர் The Pirate Bay குழுவினர்.
எல்லோரையும் ஆச்சரியப்பட வைப்பது ஒன்று தான். ஒவ்வொரு சோதனைகளை தாண்டும் போதும், கொஞ்சம் கூட கோபப்படாமல் நக்கலாக பதிலளிப்பது (நம்மூர் கோயம்புத்தூர் குசும்பு போல) The Pirate Bay-இன் ஸ்பெஷல். சில நக்கல்கள்.
09-06-2006 ஸ்வீடன் போலீஸ் ரைடுக்கு பின்

நாங்கள் போனிக்ஸ் பறவை

ஸ்டாக்ஹோம் நகர கோர்ட்டில் இந்த வழக்கு நடந்த போது, ஸ்வீடன் வழக்கப்படி, எதிக்கட்சி வக்கீலான professor emeritus Roger Wallis-இடம் நீதிபதி, அவர்கள் வழக்கப்படி, இந்த கேசை வாதாடுவதற்க்காக ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டதற்கு, அவர் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், கோர்ட் விருப்பபட்டால் தனது மனைவிக்கு ஒரு மலர் பூங்கொத்து அனுப்பலாம் என்றும் கூறினார். ஆனால் நீதிபதி இதை ஏற்க்க மறுத்து விட்டார். அன்று மாலைக்குள் US$5,000 அளவிற்கு வலைதளங்கள் மூலம் அவர்கள் வீட்டிற்கு பூங்கொத்துக்கள் உலகம் முழுவதும் இருந்து அனுப்பப்பட்டன.
சென்ற வாரம் நோபல் பரிசு அறிவித்தபோது அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். நியாயமாக அமைதிக்கான நோபல் பரிசு எங்களுக்கு கிடைக்க வேண்டும். அடுத்த வருடமாவது எங்களுக்கு தரவில்லை என்றால் ஸ்வீடன் நாட்டை நாங்கள் தடை செய்து விடுவோம். அதன் பின் தெரியும் எங்களால் ஸ்வீடன் நாட்டு மக்கள் எவ்வளவு நிம்மதியாக வீட்டில் இருக்கிறார்கள் என்பது. பலருக்கு இலவச மென்பொருள் அளித்தது மூலம் நாங்கள் மிகப் பெரிய பொருளாதார உதவி செய்துள்ளோம். அதற்காக எங்களுக்கு பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு தர வேண்டும்.

Cloud-க்கு போனதால் வந்த நன்மைகள்.

1.     பண முதலீடு மிகவும் குறைவு.
2.     சைட் டௌன் டைம் மிகக் குறைவு.
3.     சைட்டை ஒரு செர்வரில் இருந்து, மற்றொன்டிற்கு மாற்றுவது மிகவும் எளிது.
4.     யாராலும் தடை செய்ய முடியாது.
5.     இவை எல்லாவற்றையும் விட 17 virutal machines, ச்விட்ச்கள், ரௌட்டர், cloud, cooling system அனைத்தும் சேர்ந்து வெறும் 2500W பவரில் இயங்குகிறது. இது கிட்டத்தட்ட நம் வீட்டில் இருக்கும் ஒரு வாக்குவம் கிளீனர் எடுத்துக்கொள்ளும் பவருக்கு சமம். இதற்கு முன் அவர்கள் உபயோகபடுத்திய 16 dedicated servers & 3 switches 6000W பவரை உறிஞ்சியுள்ளன. இப்போது உலகில் உள்ள நம்பர் ஒன் கிரீன் சைட் The Pirate Bay தான்.
உலகில் பல பைல் ஷேரிங் சைட்கள் இருக்க The Pirate Bay-ஐ மட்டும் ஏன் இப்படி குறி வைக்கிறார்கள்.
          உலகின் எழுபத்து ஏழாவது பிரபலமான வெப்சைட்.
          அமெரிக்காவின் எழுபத்தி ஆறாவது பிரபலமான வெப்சைட். (இதுதான் மிக முக்கியம்).
          இந்தியாவில் 48ஆவது பிரபலமான வெப்சைட்.
   அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் தான் அதிகம் பேர் இதை உபயோகப்படுத்துகிறார்கள்.
வாழ்க வளமுடன் The Pirate Bay.