Saturday, June 2, 2012

LCD - பின்னால் உள்ள உண்மைகள் - II



ஒரு மானிட்டர் வாங்கும்போது அதன் technical specification-உள்ள விஷயங்களில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

Native Resolution or Pixel Count.


நல்ல விலை உயர்ந்த மானிட்டர்கள் கூட சில நேரங்களில் சரியான படத்தை காண்பிப்பதில்லை. நாம் இதை மானிட்டர்-இன் கோளாறாக நினைத்து கொள்கிறோம். ஒரு மானிட்டர்-இன் native resolution-உம் அந்த கம்ப்யூட்டர் இன் resolution-உம் (தமிழில் பிரிதிறன்) ஒன்றாக இருந்தால்தான் மானிட்டர்-இன் படமும் துல்லியமாக இருக்கும். பழைய CRT மானிட்டர்-க்கும் புதிய LED மானிட்டர்-க்கும் உள்ள வித்தியாசம் இங்கே தான் இருக்கிறது. CRT மானிட்டர்கள் நீங்கள் எந்த resolution-இல் படத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் அது தன்னை மாற்றிக் கொண்டுவிடும். ஆனால் LCD மானிட்டர்-கள் fixed raster technology-இல் வேலை செய்பவை. இவை நாம் தரும் resolution-க்கு தகுந்தவாறு தம்மை மாற்றிக கொள்ள முடியாது. எனவே இவை வேறு விதமாக செயல்படுகின்றன. நாம் தரும் படத்தை சுருக்கியோ அல்லது பெருக்கியோ படத்தை தருகிறது. எனவே நமக்கு புள்ளி புள்ளியாகவோ அல்லது கலர் கம்மியாகவோ படம் தெரிகிறது. உங்களுக்கு மிக அழகாக துல்லியமாக படம் வேண்டும் என்றால், நம் விண்டோஸ்-இன் resolution-ஐ மானிட்டர் resolution-க்கு ஏற்றவாறு மாற்றிக கொள்ளுங்கள்.
எல்லா படங்களும் 4:3 aspect ratio (தோற்ற விகிதம்) என்ற அடிபடையில் தான் உருவாக்கபடுகின்றன. எனவே தான் நம் மானிட்டர்-களில் resolution எப்போதும் 640 x 480, 800 x 600, 1024 x 768, 1280 x 960, 1600 x 1200 என்று இருக்கிறது. உங்கள் மானிட்டர்-இன் resolution-உம் windows-இன் resolution-உம் ஒன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் வைத்தால் கிடைக்கும் படம் தான் அந்த மானிட்டர்-இன் அதிக பட்ச திறமை. நாம் பெரும்பாலும் செய்யும் தவறு 1280 x 1024என்று resolution-ஐ வைப்பது தான். ஒரு 1024x768 அல்லது 800x600 படத்தை 1280x1024 என்ற resolution-க்கு மானிட்டர் மற்றும் போது படம் சிதறுவது கலர் மாறுவது என்பது நிகழ்கிறது.
ஆனால் இதிலும் சில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. முக்கியமாக படம் 800 x 600 –இல் இருந்து 1024 x 768 மானிட்டர்-க்கு மாற்றும் போது, மானிட்டர் smoothing algorithm என்ற முறையை உபயோகபடுத்துவதால் சில பிரச்சனைகள் வருகிறது. மிக முக்கியான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மானிட்டர்-ஐ 15 pin VGA port-இல் இணைத்திருக்கும் போது தான் மானிட்டர்-கள் இந்த செயலை செய்கின்றது. அதே மானிட்டர்-ஐ நீங்கள் DVI port-இல் இணைத்திருந்தால் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டு இந்த வேலையை ஏற்றுக் கொள்ளும். அப்போது உங்களுக்கு இந்த பிரச்சனை வராது. எனவே முடிந்தவரை DVI port-இல் மானிட்டர்-ஐ இணையுங்கள்.
விண்டோஸ் –ஐ இன்ஸ்டால் செய்யும்போது அது தானாகவே resolution-ஐ மாற்றிக் கொள்ளவா? என்று கேட்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு மானிட்டர்-ம் Extended display identification data (EDID) என்று ஒன்று உள்ளது. இது கம்ப்யூட்டர்-க்கு தன்னுடைய NATIVE RESOLUTION என்ன என்று கூறும். அதற்கு ஏற்றாற்போல் விண்டோஸ் தன் RESOLUTION ஆற்றிக் கொள்ளும். PC READY TV என்று விளம்பரம் பார்த்திருப்பீர்கள். இந்த வகை டீ.வீ,க்கள் EDID உடன் வருபவை. எனவே இவைகளை கம்ப்யூட்டர் உடன் இணைக்கும் போது விண்டோஸ் சொல்லும் resolution-க்கு மாறிக் கொள்வது நல்லது. ஆனால் சில டி.வி. க்கள் இந்த வசதியை கொண்டிருப்பதில்லை. முக்கியமாக 1366 x 768 pixels கொண்ட டி.வி.க்கள் கம்ப்யூட்டர் உடன் இணைக்கும் போது சிறிது பட துல்லியம் குறைகிறது. எனவே மானிட்டர் உடன் வரும் டிரைவரை கண்டிப்பாக இன்ஸ்டால் செய்யுங்கள்.
பெரும்பான்மையான மானிட்டர்கள் கீழ்கண்ட native resolutionஐ கொண்டுள்ளன.
17" (Widescreen): 1280x800 (WXGA)
19" (Widescreen): 1440x900 (WXGA+)
21" (Widescreen): 1600x900 (WSXGA+)
22" (Widescreen): 1920x1080 (WUXGA)
24" (Widescreen): 1920x1080 (WUXGA)
27" (Widescreen): 2560x1440 (WQHD)
30" (Widescreen): 2560x1600 (WQXGA)
இங்கே தான் நம் கம்பெனி-கள் தங்கள் அறிவை காண்பிக்கின்றன. பெரும்பான்மையான மானிட்டர் technical specification-இல் native resolution என்பதே இல்லை. வெறும் resolution  என்று தான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் இது அந்த மானிட்டர்-இன் அதிக பட்ச resolution தானே ஒழிய native resolution கிடையாது. அது எப்போதும் native resolution-ஐ விட அதிகமாகவே  இருக்கும். நாமும் அதை பார்த்து இருப்பதிலேயே மிக அதிக resolution மானிட்டர் இது தான் என்று ஏமாந்து வாங்கி விடுகிறோம்.

SIZE அளவு


மானிட்டர்-இன் அளவு என்பது பழைய CRT மானிட்டர்-களில் இரண்டு விதமாக கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று மானிட்டர் அளவு மற்றொன்று நாம் பார்க்கும் படத்தின் அளவு. ஆனால் LCD மானிட்டர்களை பொருத்தவரை இவை இரண்டும் ஒன்று தான். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பார்க்கும் அளவு என்பது (screen size) அந்த மானிட்டர்-இன் குறுக்கு அளவு (diagonal size) தானே ஒழிய மானிட்டர்-இன் நீளம் அகலம அல்ல. அதனால் தான் 24” மானிட்டர்-கள் செவ்வகமாகவும், சதுரமாகவும் வருகின்றன.

21” முதல் 27” வரை உள்ள மானிட்டர்கள் மிகவும் பொருத்தமானவை. ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் குறைந்த பட்சம் 2 அடி தூரத்தில் இருந்து பார்ப்பது தான் உங்களுக்கு நல்லது. கடைகளிலும், வெறும் கணக்கு வழக்குகளுக்காகவும் 15” மானிட்டர்களே போதுமானது.


BRIGHTNESS வெளிச்சம்.



ஒரு pixel எவ்வளவு வெளிச்சத்தை அதிகபட்சமாக கொடுக்க முடியும் என்பது தான் Brightness என்கிறோம். இதை cd/m2 candelas per square meter என்ற அளவில் கணக்கிடுகிறார்கள். சாதாரண உபயோகத்திற்கான மானிட்டர் 200 முதல் 250 cd/m2 போதுமானது. ஆனால் சினிமா மற்றும் விளையாட்டுக்கு 300 முதல் 400 cd/m2 இருந்தால் நல்லது. இப்போது வரும் எல்லா மானிட்டர்களும் நல்ல வெளிச்சத்தை கொடுக்கின்றன. எனவே இதை பற்றி நாம் கவலை படத் தேவையில்லை. பெரும்பாலும் சற்று வெளிச்சம் குறைவான அறைகளில் குறைவாகவும், வெளிச்சம் அதிகமான இடங்களில் அதிகமாகவும் நாம் மானிட்டர்இல் உள்ள மெனுவைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.

CONTRAST

Contrast என்பது வெள்ளை புள்ளியில் உள்ள அதிகபட்ச வெளிச்சத்திற்கும் கரும்புள்ளியில் உள்ள குறைந்த பட்ச வெளிச்சத்திற்கும் உள்ள வேறுபாடு தான் contrast ratio என்கிறார்கள்.
கம்பனிகளின் ஏமாற்று வேளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. உண்மையில்லேயே இது 1000:1 என்ற விகிதத்துக்கு மேல் எந்த மானிட்டர்ம் இருப்பதில்லை. ஆனால் உங்கள் மானிட்டர்-இன் technical specification-ஐ படித்தால் 10,00,000:1 என்றெல்லாம் இருக்கும். இது சுத்த பொய். கம்பனிகளை கேட்டால் அது Dynamic Contrast Ratio என்று கூறுவார்கள். அது என்ன டைனமிக் கன்றாஸ்ட் ரேஷியோ. முதல் பக்கத்தில் backlit LED என்று பார்த்தோம் அல்லவா?. அந்த LED எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும். உங்கள் மானிட்டர்-இன் பின் பக்க படம் கருப்பாக இருந்தாலும், அது எரிந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் என்னதான் மிக சிறந்த தயாரிப்பாக இருந்தாலும், சிறுது ஒளி அதை ஊடுருவி வரும். ஆனால் full array with local dimming type மானிட்டர்கள் மட்டும், மொத்தமாக பின்னால் உள்ள LED-க்களை குறைத்து விடுவதால் முழு கருப்பாக இருக்கும் (இதைப் பற்றி பின்னால் பார்ப்போம்). உண்மையில் கன்றாஸ்ட் ரேஷியோ என்பது நாம் உபயோகபடுத்தும் போது கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தான். ஆனால் கம்பெனிகள் இதை கணக்கிடும் போது முழுவதுமாக பின்னால் உள்ள LED களுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து விடுகிறார்கள். பின் புலத்தில் ஒளி உமிழ்ப்பான் இல்லாத போது நிச்சயம் கரும்புள்ளிகள், அடர் கருப்பாகத் தான் இருக்கும். இதைதான் அவர்கள் டைனமிக் கன்றாஸ்ட் ரேஷியோ என்று பொய் சொல்கிறார்கள். நாம் உபயோக படுத்தும் போது பின் உள்ள ஒளி உமிழ்ப்பான்கள் எப்போதும் அனைவதில்லை என்பது தான் மிக முக்கியமானது. உதாரணத்திற்கு சாம்சுங் S19A100N என்ற மாடலின் Dynamic Contrast ratio 50,00,000:1 என்றும் static contrast ratio 600:1 என்றும் சொல்லி இருக்கிறார்கள். எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். Static Native என்றும் கூறுவார்கள்.
ஆனால் இதில் நாம் சந்தோஷபட வேண்டியது, நம்மால் மானிட்டர்-இல் முன் பக்கமுள்ள மெனுவைக் கொண்டு contrast ஐ மாற்றிக்கொள்ள முடியும் என்பது தான். Brightness மற்றும் contrast-ஐ மாற்றி அமைத்து முடிந்தவரை contrast ratio வை அமைத்துக் கொள்ளலாம்.
பக்கத்தில் உள்ள படத்தில் முதலில் உள்ளது contrast brightness மாற்றி அமைத்துக் கொண்டது. இரண்டாவதாக உள்ளது மாற்றி அமைத்துக் கொள்ளாதது. இரண்டாவது படத்தில் உள்ள மேக கூட்டத்தை பாருங்கள். படம் எவ்வளவு மோசம என்பது தெரியும்.


பக்கத்தில் உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 1000:1 native contrast ratio மற்றும் 10000:1 Dynamic contrast ratio உள்ள இரு மானிட்டர்களின் படங்கள். Native உள்ள மானிட்டர்-இல் வெள்ளை நிறம் எவ்வளவு பளிச் என்றும், Dynamic அது gray ஆகவும் இருப்பதை கவனியுங்கள்.
மானிட்டர்கள் native or static contrast ratio 700:1 முதல் 1000:1 வரை இருப்பது நல்லது.


ஆனால் இதை எல்லாம் மீறி panel என்று ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி கம்பெனிகள் மூச்சு விடுவதில்லை. ஆனால் இந்த பேனல்கள் தான் ஒட்டு மொத்த  மானிடரின் தரத்தையே நிர்ணயிக்கிறது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

 




 

No comments:

Post a Comment