பழைய லாப்டாப்களில் நீங்கள் இந்த பிரச்சினையை பார்த்திருக்கலாம். நாம் நின்றுக் கொண்டோ, பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டோ பார்த்தால் மானிட்டரில் எதுவுமே தெரியாது. இந்த பிரச்சனையை பார்வைக் கோணம் பிரச்சினை என்கிறோம். இதன் காரணம் என்ன? பழைய CRT மானிட்டர்களில் ஒளி என்பது நமது திரையில் உருவாகிறது. ஆனால் LCD மானிட்டரில் திரைக்கு பின்னால் தான் ஒளி உருவாகிறது. ஒளி நேர் கோட்டில் வரும்போது தான் திரையை விட்டு வெளியேறுகிறது என்று பார்த்தோம் அல்லவா? அது தான் இங்கு பிரச்சினை. ஒளி நேர் கோட்டில் வெளியேறுவதால் நாம் மானிட்டரின் நேர் எதிரே உட்கார்ந்து இருக்கும் போது மட்டும் தான் நமக்கு சரியான படம் கிடைக்கும். நாம் மானிட்டரின் பக்க வாட்டிலோ, மேல் கீழோ பார்க்கும்போது நமக்கு படம் நிறம் மாறி தான் தெரியும். உண்மையில் இதற்கு காரணம் நிறம் மாற்றமல்ல. Contrast ratio மாறுவது தான்.
Viewing angle-ஐ இரண்டு எண்களில் கூறுவார்கள். உதாரணத்திற்கு 170/170. முதலில் உள்ள எண் பக்கவாட்டு கோணத்தையும் அடுத்து உள்ளது மேல் கீழ் கோணத்தையும் குறிக்கிறது. அதாவது நீங்கள் மானிட்டருக்கு நேரே 0 டிகிரியில் உடகார்ந்து கொண்டு பார்க்கும் படத்தின் தரம் 170/2 = 85 டிகிரி பக்க வாட்டிலோ மேலேயோ பார்க்கும் போது குறையாது என்பது தான்.
இதை எப்படி கணக்கிடுகிறார்கள். நீங்கள் படத்தை நேராக பார்க்கும் பொழுது அதன் contrast ratio 1000:1 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து நீங்கள் விலகி செல்கிறீர்கள் என்றால் நீங்கள் நேராக பார்க்கும் படத்தின் வெளிச்சம் பாதி அளவு குறைவாக வரும் கோணம் தான் பார்வைக் கோணம். ஆனால் நம் கம்பெனிகள் 5:1, 10:1 contrast ratio வரும் வரை பார்வைக் கோணம் என்று கணக்கிடுகிறார்கள். எனவே மானிட்டர் வாங்கும் பொழுது, நேரடியாக உங்கள் கண்ணால் காண்பது மட்டுமே மெய். மற்றதெல்லாம் வெறும் பொய்.
நீங்கள் பெரிய மானிட்டர் வாங்க போகிறீர்கள் என்றால் சற்று கவனமாக பாருங்கள். சிறிய மானிட்டரில் மேல் இடது முனையில் இருந்து, கீழ் வலது முனை வரை உள்ள கோணம் சிறுது என்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் பெரிய மானிட்டரில் இந்த கோணம் அதிகம் என்பதால் சாதாரணமாகவே ஒரு முனைக்கும் மற்றொரு முனைக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும்.
நான் அடிக்கடி சொல்லுவது போல் பார்வைக் கோணம் என்பதுவும் panel சம்பந்தப்பட்டது. நாம் பெரும்பாலும் வாங்கும் குறைந்த விலை மானிட்டர்கள் TN panel வகையை சேர்ந்தவை. இந்த வகை மானிட்டர்கள் மிக குறைந்த பார்வைக் கோணம் உடையவை. கீழே உள்ள படத்தில் TN, VA, IPS Panel-களில் ஒரு படத்தை வெவ்வேறு கோணங்களில் எப்படி தெரிகிறது என்று பாருங்கள்.
![]() |
Samsung TN Panel |
![]() |
Samsung PVA Panel |
![]() |
NEC IPS Panel |
பார்வைக் கோணம் குறைவாக உள்ள மானிட்டரை வங்கி மற்றும் மற்ற ரகசிய இடங்களில் உபயோகப்படுத்தலாம். DTP, photo / video editing செய்பவர்களுக்கு அதிக பார்வைக் கோணம் உள்ள மானிட்டர்களை கொடுங்கள்.
முக்கியமாக எப்பொழுதும் உங்கள் கண்ணால் பார்த்த பின் மானிட்டரை வாங்கவும். Technical Specification-ஐ நம்ப வேண்டாம்.
இன்னும் இருக்கிறது.....
Very nice explanation mr.Adi. Pls keep it up.
ReplyDeletes.sivasubramaniann, TIRUNELVELI.