Sunday, March 11, 2018

விண்டோஸ் 10 Windows 10 Installation error WHEA

Windows 10 அமைக்கும் போது  WHEA_UNCORRECTABLE ERROR என்று வருகிறது. என்ன செய்யலாம் என்று ஒரு டெல் கணினியை ஒருவர் எடுத்துக் கொன்டு வந்தார். ஹார்ட் டிரைவ், ராம், மதர்போர்ட் போன்றவற்றை செக் செய்தாலும் ஒன்றும் மாறவில்லை. USB அல்லது DVD எதில் பூட் செய்தாலும், விண்டோஸ் லோகோ வந்து 20 நொடிகளிலேயே இந்த தவறு வருகிறது. இந்த தவறுக்கு தவறான டிரைவர் தான் காரணமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் சொல்கிறது. ஆனால் இன்னும் விண்டோஸ் அமைக்கப்படவே இல்லையே. அப்புறம் எப்படி இந்த தவறு வருகிறது.

நோய் நாடி நோய் முதல் நாடி

முதல் இந்த தவறுக்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்ததில் Sysrep எனும் ப்ரோக்ராம் தான் இதற்குக் காரணம் என்று தெரிந்தது. sysprep ப்ரோக்ராம் விண்டோஸ் அமைக்கும்போது வேகமாக அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதில் ஒரு சில குறைபாடுகள் உண்டு. அனைத்து விதமான கணினிகளின் டிரைவர்களும் இதில் இருக்காது. இந்த கணினி ஒரு வருடம் முன் வாங்கப்பட்டது என்றாலும், அதில் இருந்த ஓரிஜினல் விண்டோஸ் ரெகவர் பண்ண முடியாததாலும், டெல் கம்பெனியில் இருந்து வர நாட்களாகும் என்பதாலும், தற்காலிகமாக விண்டோஸ் ட்ரையல் அமைக்கும்போது தான் இந்த பிரச்சினை வந்தது.

சோதனை முயற்சிகள்.

sysrep அடிப்படை உறுப்புகளுக்கு (Basic components) டிரைவர்கள் அமைக்கும் போது தவறு நேருகிறது. எனவே biosஇல் உள்ள ஒரு சில உறுப்புகளை disable செய்துப் பார்க்க முயற்சி எடுக்கப்பட்டது. Serial port, USB 3.0, Parallel port, Ethernet port  என்று ஒவ்வொன்றாக disable செய்யப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. எதுவும் பிரட்சினையை சரி செய்யவில்லை. Multi core Processorஇல் நாம் வேண்டும் என்றால் எந்த coreஐ வேண்டுமானால் on அல்லது off செய்யலாம். இந்த வகையில், அனைத்து கோர்களையும் அனைத்து விட்டு ஒரே ஒரு கோரை மட்டும் வைத்துக் கொண்டு விண்டோஸ் அமைக்கும்போது ஒழுங்காக சென்றது.

முடிவு

விண்டோஸ் அமைக்கும்போது, பூட் ஆகிய உடனே, விண்டோஸ் லோகோ வரும்போதே WHEA error வந்தால், bios சென்று ஒவ்வொரு உறுப்பையும் அணைத்து விட்டு விண்டோஸ் அமைத்து விட்டு, அதன் பின் bios சென்று, மறுபடியும் ஒவ்வொன்றையும் ஆன் செய்யவும்.

If installaing windows, while displaying the windows logo at start, if the error WHEA occurs, go to bios, disable all the basic components like multi-core of the processor, audio, ethernet, etc., and try. After install the windows, go to bios and re-enable all the components.




No comments:

Post a Comment