Monday, March 19, 2018

வைரஸ்கள் பலவிதம். - I

நம்மைப் பொறுத்தவரை ஒரு கணினி சரியாக இயங்கவில்லை என்றால், அதை வைரஸ் தாக்கியுள்ளது என்றுத் தான் பொதுவாகக் கூறுகிறோம். ஆனால், வைரஸ் என்பது பொதுப் பெயர் இல்லை. அதன் பொதுப் பெயர் மால்வேர் (Malware) என்பதாகும். Malicious software என்பதின் சுருக்கமே Malware. Malicious என்றால் கேடு விளைவிக்கும் என அர்த்தம். நம் கணினிக்கு கேடு விளைவிக்கும் மென்பொருட்கள் அனைத்துமே இந்த மால்வேர் எனும் பெயரின் கீழே தான் வரும்.

இந்த மால்வேரில் எத்தனை வகைகள் இருக்கின்றன எனப் பார்ப்போம்.

வைரஸ் எனும் தொற்று மென்பொருள். (VIRUS)


வைரஸ் என்று அழைக்கப்படும் மென்பொருட்கள், உங்கள் கணினிக்குள் வந்தவுடன் தானாகவே இயங்கி, மற்ற ப்ரோக்ராம்களுக்கும், பைல்களுக்கும், நம் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற கணினிகள் மற்றும் பென் டிரைவ் போன்றிலுள்ள ப்ரோக்ராம்களுக்கும் தானாகவே பரவுவதைத்தான் தொற்று மேம்பொருள் (வைரஸ்) எனப்படும்.

வார்ம் (WORM)


வார்ம் எனப்படும் மென்பொருள், தன்னை இயக்கும் மென்பொருள் அல்லது எந்தவொரு மனித தலையீடும் இன்றி தன்னைத்தானே படியெடுத்து பரவும் வகையில் எழுதப்பட்டது.

பிடிவாதக் குதிரை (Trojan Horse)


இந்த வகை மென்பொருட்கள், சட்டப்படியான, உண்மையான ஒரு மென்பொருள் போலவே உங்களுக்கு அறிமுகமாகி, நீங்களே அதை உங்கள் கணினியில் பதிக்குமாறு செய்து, உங்கள் அனுமதியுடனே, உங்களுக்கு தெரியாமல் மால்வேர் மென்பொருட்களை உங்கள் கணினிக்கு இறக்குமதி செய்து விடும் மென்பொருட்களுக்கு பிடிவாதக் குதிரை என்றுப் பெயர்.

உளவு மென்பொருள் (SPYWARE)


இந்த வகை மென்பொருட்கள் உங்கள் தகவல்களைத் திருடி, உங்கள் விவரங்களை தன் எஜமானுக்கு அனுப்பிவிடும்.

கடத்தல் மென்பொருள் (RAMSOMWARE)


தற்போது, மிக அதிகமாக பரவுவதும், கணினி உபயோகிப்பாரை கதிக்கலங்க வைப்பதும், இந்த கடத்தல் மென்பொருட்கள் தான். உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் ஒரு வேர்ட் பைலாகவோ, ஜாவா பைலாகவோ உங்களுக்கு தெரிந்த அல்லது உங்கள் வங்கியில் இருந்து வருவது போல வரும் (பிடிவாதக் குதிரை / Trojan Horse). நீங்கள் இதைத் திறந்துப் பார்த்தால், உடனே உங்கள் கணினியில் பதிவேறி விடும். பின் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பைல்களையும் encrypt எனப்படும் கடவுச்சொல் (password) கொண்டு மட்டுமே திறக்க முடியும் என்ற ஜிப் பைலாக மாற்றி விடும். திரும்பவும் உங்கள் பைல்களைப் பெற, நீங்கள் அந்த கடவுச்சொல்லைக் கொடுத்தால் மட்டுமே திறக்க முடியும். அந்தக் கடவுச்சொல் தேவைப்படின் அந்த மால்வேர் எழுதியவருக்கு பல ஆயிரங்கள் (சில சமயம் லட்சங்களில்) கொடுத்தால் மட்டுமே உங்கள் பைல்களைத் திரும்பப் பெற முடியும். இவர்கள் தான் இணையவெளி குற்றவாளிகள் (Cyber Criminals) என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேர்ப்பொருள் (ROOTKIT)


இந்த மென்பொருட்கள், உங்கள் கணினியின் முழுக் கட்டுப்பாட்டையும் தன் வசம் வைத்துக்கொள்ளும்படி எழுதப்பட்டது. இவை பதிந்தவுடன், உங்கள் கணினியை வெளியிலிருந்து இந்த மென்பொருளை எழுதியவர் இயக்க ஒரு வழியை ஏற்படுத்தி விடும்.

---------------------------------------- தொடரும் -------------------------------------

No comments:

Post a Comment