Friday, February 15, 2013

Daily a Byte - Process explorer

பல வாடிக்கையாளர்கள் நம்மிடம் சொல்லும் குறை. திடீரென்று கணினி மியாவும் மெதுவாக வேலை செய்கிறது என்பது தான். இதன் காரணம் எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். பார்டிஷியன் இடம் போதாதது, மெமரி குறைவு, அதிக மென்பொருட்களை வைத்திருப்பது, வைரஸ், இவற்றில் எதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மெமரியில் இப்போது என்ன என்ன ஓடிகொண்டிருக்கிறது என்று பார்க்க டாஸ்க் மானேஜரை உபயோகிக்கிறோம். ஆனால் அது முழுமையாக காண்பிப்பதில்லை. எந்தெந்த ப்ரோசெஸ் எந்தெந்த பைல்களை உபயோகபடுத்திக்கொண்டிருக்கிறது என்பதை துல்லியமாக கீழ்க்கண்ட மென்பொருள் தருகிறது. அதோடில்லாமல் அந்த பைல் எங்கே இருக்கிறது, அதன் விளக்கம், CPU நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறது, ஹார்ட் டிஸ்க் I/O கையாளும் அளவு போன்றவற்றை தருகிறது. சிறிது பொறுமையாக கவனித்தால், எந்த பைல் கணனி வேகம் குறைவதற்கு காரணம் என்பதைக் கண்டுபிடித்து விடலாம். அதில் முக்கியமாக நெட்வொர்க் டாப்பில் எந்தெந்த பைல்கள் இன்டர்நெட்டை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஏதாவது வைரஸ் இன்டர்நெட்டை பயன்படுத்திக்கொண்டிருந்தால் கண்டுப்பிடித்து விடலாம். சில வைரஸ்கள் மறைமுகமாக ப்ரோசெஸ் லிஸ்டில் வராமல் இருக்கும். அதை டூல்ஸ் மெனுவில் உள்ள hidden processes-ஐ இயக்கி கண்டுப்பிடித்து விடலாம். இதை ஒரு வைரஸ் இல்லாத கணினியில் இயக்கி, என்னென்ன இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். பின்னர் மற்ற கணினியில் இயக்கி வித்தியாசமாய் ஏதாவது இருந்தால் அது என்ன என்பதை அறிந்து முடிவெடுங்கள்.
http://processhacker.sourceforge.net/downloads.php


தயவு செய்து இந்த ப்ளாக் தங்களுக்கு உபயோகமாக இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது தங்களுக்கு தேவைப்படுகிறதா என்பதை சிரமம் பார்க்காமல் எனது இ-மெயில்-க்கு தெரிவியுங்கள். avmcomputers@gmail.com.

No comments:

Post a Comment